சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு இந்திய சமூக அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தமிழக  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்து பேசுவதாக பதிவாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம் பெரியார் பல்கலைக்கழகமும், இந்திய சமூக அறிவியல் அகாடமியும் இணைந்து 41-வது இந்திய சமூக அறிவியல் மாநாட்டினை நடத்துகிறது. பெரியார் பல்கலைக்கழக கலையரங்கில் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. 


இதில், பல்கலைக்கழக வேந்தர் மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு இந்திய சமூக அறிவியல் மாநாட்டினை தொடங்கி வைத்தனர். மேலும், சிறப்புரையாற்றி, ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்பினை வெளியிட்டார்.


இந்நிகழ்ச்சியில், உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், பல்கலைக்கழக நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளருமான சுனில் பாலிவால், இந்திய சமூக அறிவியல் அகாடமி தலைவர் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். 


இம்மாநாடு தொடர்ந்து ஐந்து நாட்கள் மற்றும் எட்டு சிறப்பு அமர்வுகளும் நடைபெறுவதாக கூறுயுள்ளனர். மேலும், பருவநிலை மாற்றம், சுகாதாரம், வறுமை ஒழிப்பு, பொருளாதார மாற்றம், உயர்கல்வி மாற்றம், வேலை வாய்ப்பின்மை போன்ற 21 தலைப்புகளின் ஆய்வரங்கம் நடைபெறுகின்றன.


இந்நிகழ்வுகளில் நாடு முழுவதிலும் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், சிறப்பு அமர்வாக நாட்டின் தலைசிறந்த 60 கல்வியாளர்கள் கலந்து கொண்டு தங்களது ஆய்வு முடிவுகளை வெளியிட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.