தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கலைவாணர் அரங்கின் மூன்றாம் தளத்தில் நடந்த சட்டபேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்க,  முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் முன்னதாகவே வருகை தந்தனர். பின்னர் சபைக்கு வந்த ஆளுநரை சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.பின்னர் ஆளுநர் நிகழ்த்திய உரையில், அரசின் பல்வேறு திட்டங்கள், கொள்கை, எதிர்கால திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த உரையில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகளில் ஒன்று, தமிழகத்தின் (Tamil Nadu)  பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனை வழங்க, முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்று உருவாக்கப்படும்  என்ற அறிவிப்பாகும். இந்தக் குழுவில் உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் இடம் பெற உள்ளனர்.


ALSO READ | TN Assembly: தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை


புதிதாக அமைக்கப்பட உள்ள பொருளாதார ஆலோசனைக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பொருளாதாரத்தின் பயன்களை அனைவரும் பெற மாநில அரசு உறுதி செய்யும்  என ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.


பொருளாதார குழுவில் இடம் பெற உள்ள பொருளாதார நிபுணர்கள்


1. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்,


2. நோபல் பரிசு (Nobel Price) வென்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ


3. மத்திய அரசின் (Central Government) முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்.


4. ராஞ்சி பல்கலைக்கழகத்தின் தில்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்-ன் ஜீன் ட்ரெஸ்,


5. மத்திய அரசின் நிதித்துறையின் முன்னாள்  செயலர் நாராயணன் 


இக்குழு மாநிலத்தின் பொருளாதார நிலையை ஆராய்ந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனைகளை வழங்குவார்கள்.


ALSO READ | Lockdown Update: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரசு பஸ் சேவை தொடக்கம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR