TN Assembly: தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தொடங்கியது. மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 21, 2021, 11:42 AM IST
  • தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது.
  • ஆளுநர் உரைக்கு பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடும்
  • சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஆளுநரின் ஆங்கில உரையின் தமிழாக்கத்தை செய்கிறார்
TN Assembly: தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை   title=

சென்னை: தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தொடங்கியது. மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. 

இது மக்களின் அரசாங்கம், ஒரு கட்சியின் அரசல்ல என்று ஆளுநர் குறிப்பிட்டார். இது எமது அரசு என்று மக்கள் அனைவரும் பெருமைப்படும் நிலையில், மாநில அரசு செயல்படும் என்று ஆளுநர் உறுதியளித்தார்.

சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஆளுநரின் ஆங்கில உரையின் தமிழாக்கத்தை செய்து வருகிறார், மாநிலம் முழுவதும் உழவர் சந்தை தொடங்கப்படும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிட்டார். பெருந்தொற்றுக் காலத்தில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

எங்கும் எப்போதும அரசு சேவைகளை இணையவழி சேவைகளைப் பெறத் தேவையான நட்வடிக்கைகள் எடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக பயன்படுத்தவேண்டும் என்று ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

Also Read | TN Assembly: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது

சச்சார் குழுவின் பரிந்துரைகளின்படி அரசு செயல்படும். அதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு, இணையவழி குற்றங்கள், குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு உறுதியாக இருக்கும் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார். 

திருநங்கைகளுக்கான வாரியத்தை அமைத்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியைப் பற்றி குறிப்பிட்டு, அவரை பாராட்டினார் ஆளுநர். ஒலிம்பிக் போட்டிகளில் மாநிலத்தை சேர்ந்த வீர-வீராங்கனைகள் பங்கேற்க தேவையான ஊக்கத்தை மாநில அரசு மேற்கொள்ளும் என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

சமூக நீதியும், பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தமிழக மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்த சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே அனைவரும் ஆக்கப்பூர்வமாக செயலாற்ற வேண்டும் என்று மாநில கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கேட்டுக் கொண்டுள்ளார்.

Also Read | Lockdown Update: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரசு பஸ் சேவை தொடக்கம்

மாநில போக்குவரத்து அமைப்பை மேம்படுத்துவதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகளை முழுமையாக முடித்திட திமுக அரசு உறுதியாக உள்ளது. 

வேலைவாய்ப்புகளை உயர்த்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும்.  வெளிப்படைதன்மையுடன் கோவில்களின் நிர்வாகம் மேற்கொள்ளப்படும் என்று ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.

சட்டப்பேரவை கூட்டம் கூட்டுவது தொடர்பாக சமீபத்தில் ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவுவும் ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். முறையான அழைப்பைப் பெற்றுக் கொண்ட ஆளுநர் அனுமதியளித்ததை தொடர்ந்து கூட்டத் தொடர் தொடங்கியது. 

Also Read | TN Assembly: தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News