கொசஸ்தலை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றம் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக் காரணமாக பல அணைகள் நிரம்பி வருகிறது. அதில் இருந்து மழை உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழையால் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டி தீர்ப்பதால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதி முதல் முழு கொள்ளளவான 3291 மில்லியன் கன அடியை எட்டியதையடுத்து கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதன்படி காலை 10 மணி நிலவரப்படி நீர் இருப்பு 2873 மில்லியன் கன அடியும், நீர் வரத்து 23000 கன அடியாகவும் இருப்பதால் வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொசஸ்தலை ஆறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கத்தண்டலம், வெள்ளியூர் தாமரைப்பாக்கம் மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (29.11.2021) விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மதல் மிக கன மழை பெய்யும்.
ALSO READ | வானிலை தகவல்: இன்று நாளையும் எங்கெல்லாம் மழை பெய்யும்
அதேபோல மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட கடலோர மாவட்டங்கள், ஏனைய டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது மதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்ன. நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானமழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு. நகரின் ஒரு சில இடங்களில் லேசானது மதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வங்க கடல் பகுதியில் இன்று (29.11.2021) குமரிக்கடல் பகுதிகளில் கறாவளி காற்று மணிக்கு 40 மதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல நாளை (30.11.2021) தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய கறைந்த காற்ற்றழுத்த தாழ்வு பாதி உருவாக வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்க திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதன் காரணமாக தெற்கு அந்தமான் கடல் பாதியில் கறாவளி காற்று மணிக்கு 40 மதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் பேசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரபிக்கடல் பகுதியில் இன்று (29.11 2021) தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா கடலோர பகதிகள் மற்றும் லட்சத்தீவு பாகுதிகளில் கறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ALSO READ | Promise by MK Stalin: முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன் - மு.க. ஸ்டாலின்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR