கொடைக்கானலில் பயங்கர காட்டுத்தீ...விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட நடிகர் கார்த்தி
கொடைக்கானலில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கொழுந்து விட்டு எரிந்து வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக பகல் நேரத்தில் கடுமையான வெப்பமும், இரவு நேரத்தில் காற்றுடன் கூடிய உறை பனியும் நிலவி வந்த நிலையில், தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் வனப்பகுதியில் உள்ள செடிகளும், மரங்களும் காய்ந்த நிலையில் உள்ளன. கடந்த இரண்டு நாட்களாக தோகை வரை, மயிலாடும்பாறை ஆகிய இடங்களிலும், எம்.எம்.தெரு குடியிருப்பு பகுதியிலும் , நேற்று இரவு உப்புப்பாறை மெத்து பகுதியிலும் காட்டுத்தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு பக்கம் காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கொடைக்கானல் வனசரகத்திற்குட்பட்டதோகைவரை என்னும் இடத்தில் மீண்டும் காட்டு தீயானது தொடர்ந்து கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
100 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பரப்பில் காட்டுத்தீயானது வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதிகளில் உள்ள வன விலங்குகள் தற்போது இடம்பெயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த காட்டுத்தீயினால், அரிய வகை செடிகளும், விலை உயர்ந்த மரங்களும் தீயில் கருகி நாசமாகின. இதன் காரணமாக மச்சூர் மலைப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் தடுமாறி வருகின்றனர். மொத்தம் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வந்தாலும், தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் காட்டு தீ வேகமாக பரவி வருகிறது.
மேலும் படிக்க | கொடைக்கானலில் பரவும் காட்டுத்தீ - தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்
இந்த காட்டுத்தீ குறித்து விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் கார்த்தி, காட்டுத்தீயைத் தவிர்க்கவும், அதனைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் வனத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த காட்டுத்தீயால் தாவரங்கள், வன விலங்குகள் உள்ளிட்டவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், கொடைக்கானல் மலையை காக்க கவனமாக இருக்க வேண்டும் எனவும் கார்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் படிக்க | செல்பி எடுக்க முயன்றபோது அணையில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் பலி!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR