இந்திய கிரக்கெட்அணியின் முன்னாள் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் இன்று பாஜக கட்சியில் இணைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 1983-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் அறிமுகமானவர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் (Laxman Sivaramakrishnan). சுழற்பந்து வீச்சாளரான இவர் இதுவரை இந்திய அணிக்காக 9 டெஸ்ட்போட்டிகளிலும், 16 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் டெஸ்ட் போட்டிகளில் 130 ரன்களும் 26 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார்.  


ALSO READ | Politics: பிரபல நடிகை விஜயசாந்தி பாஜகவில் இணைந்ததன் பின்னணி என்ன?


டெஸ்ட் போட்டிகளில் 64 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 35 ரன்கள் கொடுத்து 3விக்கெட்டுகள் கைப்பற்றியது இவரது சிறந்த ஆட்டமாகும். இவர் கடைசியாக கடந்த 1985-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விளையாடினார். 


அதன்பிறகு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த அவர், 1987-ம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராக செயல்பட்டு வந்த அவர் தற்போது பாஜக (BJP) கட்சியின் இணைந்துள்ளார்.


 



 


இந்த ஆண்டு அக்டோபரில், நடிகை குஷ்பு (Kushboo) காங்கிரசில் (Congress) இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். "தேசம் முன்னேற வேண்டுமானால், நாட்டை சரியான திசையில் கொண்டு செல்ல பிரதமர் நரேந்திர மோடியைப் போன்ற ஒருவர் எங்களுக்குத் தேவை" என்று பாஜகவில் இணைந்த பின்னர் அவர் கூறினார்.


ALSO READ | மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் பாஜகவில் இணைந்தார்! டென்ஷனில் கமல்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR