சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனப் பொதுச் செயலாளரான அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
புதிய வேளாண் சட்டத்தை மக்கள் நீதி மய்யம் (MNM) ஆதரிக்காத காரணத்தால் அக்கட்சியில் இருந்து விலகியதாக அருணாசலம் கூறியுள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு (TN Assembly Election 2021) அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சியின் மிக முக்கிய தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ALSO READ | தமிழகத்தில் MNM ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் - கமல் அதிரடி!
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் (Makkal Needhi Maiam) கட்சியின் மிக முக்கிய உறுப்பினர் அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். கமல்ஹாசன் (Kamal Haasan) கட்சி தொடங்குவதற்கு முன்பிருந்தே கமலுடன் இணைந்து செயல்பட்டவர் அருணாசலம். சில வாரங்களாகவே கட்சியில் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார். தற்போது அவர் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
Chennai: Makkal Needhi Maiam leader A. Arunachalam joins Bharatiya Janata Party in the presence of Union Minister and BJP leader Prakash Javadekar pic.twitter.com/wUh7Jfr6zC
— ANI (@ANI) December 25, 2020
பாஜகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருணாசலம், புதிய வேளாண் சட்டத்தை மக்கள் நீதி மய்யம் ஆதரிக்காத காரணத்தால் அக்கட்சியில் இருந்து விலகியதாக அருணாசலம் கூறியுள்ளார்.
ALSO READ | ஜெருசலேம் புனித யாத்திரை உதவித் தொகை 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது தமிழக அரசு
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR