அதிமுகவில் ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் மாறி மாறி நிர்வாகிகளை நீக்கும் விளையாட்டு தொடர்ந்துகொண்டிருக்கிறது. இபிஎஸ் நீக்குவதாக அறிவித்தால் அடுத்த நாள் ஓபிஎஸ்ஸும் அறிக்கை வெளியிட்டு இபிஎஸ் தரப்பிலிருந்து நீக்கிக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி புதிய நிர்வாகிகளையும் இருவரும் மாறி மாறி நியமித்துவருகின்றனர். இதனால் அதிமுக தொண்டர்கள் கடுமையான மன உளைச்சலுக்கும், குழப்பத்திற்கும் ஆளாகியிருக்கின்றனர். இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமர் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “சென்னை வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி மட்டுமே சந்திப்பார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக அறக்கட்டளைகளில் உள்ள பணத்தை வைத்து, மெரினா கடற்கரையில் கருணாநிதி பேனாவை வைக்கட்டும். விளம்பர அரசியலுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்கிறார்கள்.



சொத்து வரி உயர்வு, மின்சாரம் கட்டணம் உயர்வு கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. திமுக அரசை கண்டித்து, சென்னையில் இதுப்போன்ற ஆர்ப்பாட்டத்தை கண்டதில்லை என்றவாறு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வருகிற 27ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெறும். இதுதொடர்பாக, அதிமுக அமைப்பு சார்பில் 9 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர் அவர்களுடன் ஆலோசனை செய்துள்ளோம்.


அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி டெல்லிபயணம் குறித்து, வேண்டுமென்றே தவறான தகவல்கள் செய்தியாக பரப்பிவிடப்படுகிறது. சென்னை வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை, அதிமுக சார்பில் அதிகாரபூர்வமாக எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து தமிழகத்தின் நடக்கும் பிரச்சினைகள் குறித்து மனு அளிப்பார். ஓ.பன்னீர்செல்வம் ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றிக்கொண்டிருக்கிறார் என்றார்.



மேலும் திமுக குறித்து பேசிய அவர், “ திமுக தேர்தல் வாக்குறுதிகளான பெண்களுக்கு உரிமைத் தொகை, கல்வி கடன் ரத்து உள்ளிட்ட திமுக அரசு எந்தவிதமான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.


திமுக அறக்கட்டளைகளில் உள்ள பணத்தை வைத்து, மெரினா கடற்கரையில் கருணாநிதி பேனாவை வைக்கட்டும். இந்த அரசாங்கம் விளம்பர அரசியலுக்கு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகழை பாடுகின்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க | இன்னும் 5 வருடங்கள்தான் அப்புறம் தமிழகம் என் கையில் - சீமான் சபதம்


நாங்கள் கொண்டு வந்த திட்டத்திற்கு லேபிள் ஓட்டுவது, பெயிண்ட் அடிப்பது தான் திமுக அரசு செய்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலையை திமுக அரசு குறைக்கவேண்டும்.  அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு 
ஜி.எஸ்.டி உயர்தியதற்கு, நிதியமைச்சர் பி.டி.தியாகராஜன் கடிதம் எழுதினால் மட்டும் போதாது. மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என்றார்.


மேலும் படிக்க | எம்.பி இளையராஜாவுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ