எம்.பி இளையராஜாவுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து

மாநிலங்களவை எம்.பியாக இன்று பதவியேற்றுக்கொண்ட இளையராஜாவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 25, 2022, 05:21 PM IST
  • இளையராஜாவுக்கு எம்பி பதவி வழங்கப்பட்டது
  • அவர் இன்று தமிழில் பதவி பிரமாணம் செய்துகொண்டார்
  • அவருக்கு தமிழிசை வாழ்த்து தெரிவித்துள்ளார்
எம்.பி இளையராஜாவுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து title=

தமிழ் சினிமாவின் இசை முகத்தை மாற்றிவைத்தவர் இசைஞானி இளையராஜா. பொதுவாக அரசியல் கருத்துக்களை தெரிவிக்காத அவர் சமீபத்தில் மோடியை புகழ்ந்து அம்பேத்கரோடு ஒப்பிட்டிருந்தார். அவரது அந்தப் பேச்சு கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தனது கருத்தை அவர் திரும்பப்பெற வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் தனது கருத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்பதை இளையராஜா தெளிவுப்படுத்திவிட்டார். இந்தச் சுழலில் இளையராஜாவின் கலை சேவையை பாராட்டி அவர் மாநிலங்களவை எம்.பியாக நியமிப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

Ilayaraja

இதனையடுத்து ஏற்கனவே கணித்தபடி, இளையராஜா மோடியை புகழ்ந்ததால் அவருக்கு இந்த எம்.பி பதவி வழங்கப்பட்டதாக ஒரு தரப்பினர் விமர்சனம் செய்தனர். அதேசமயம், இளையராஜா செய்த இசைக்கு அவருக்கு குடியரசுத் தலைவர் பதவியே வழங்கலாமென்றும் மறுதரப்பினர் கூறினர்.

மேலும் படிக்க | அதிமுகவுக்கு புதிய இணை ஒருங்கிணைப்பாளர் நியமனம் - ஓபிஎஸ்ஸின் அடுத்த அதிரடி

இந்நிலையில் மாநிங்களவை உறுப்பினராக இளையராஜா இன்று பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பின்போது கடவுளின் பெயரால் உறுதி ஏற்கிறேன் என தமிழில் கூறி பதவியேற்றார். எம்.பியாக பதவியேற்றதை அடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகின்றனர்.

 

அந்தவகையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களால் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்பட்ட மரியாதைக்குரிய இசைஞானி இளையராஜா அவர்கள் இறை அருளோடு கடவுளின் பெயரால் அழகுத்தமிழில் பதவியேற்றுகொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | பாஜகவிற்கு சாதகமாக பணியாற்றிய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்: மெஹ்பூபா முஃப்தி

மேலும் படிக்க | மாநிலங்களவை எம்பியாக பதவியேற்றார் இளையராஜா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News