சென்னை: தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக முன்னாள் எம்.பி. சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்து எதிர்கட்சியாக இருந்த திமுக ஆளும்கட்சியாக மாறிவிட்டது.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது 33 அமைச்சவை சகாக்களுடன் பதவியேற்றுக் கொண்டார். அதையடுத்து புதிய நியமனங்கள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.


Also Read | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் PMK தலைவர் டாக்டர் ராமதாஸிடம் தொலைபேசியில் வாழ்த்து 


அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக முன்னாள் எம்.பி. சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இதற்கு  முந்தைய அரசில் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பதவி வகித்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தேர்தலில் தோற்றுப் போனதை அடுத்து தலைமை வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து விஜய் நாராயண் ராஜினாமா செய்தார். 


இதனையடுத்து திமுக சட்டத்துறை தலைவராக பதவி வகித்த மாநிலங்களவை முன்னாள் எம்.பி சண்முகசுந்தரம், தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Also Read | தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி பணிகள் தீவிரம்


மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் பதவி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. எந்தவொரு விவகாரத்திலும் தலைமை வழக்கறிஞரிடம் சட்டரீதியாக ஆலோசனை கலந்த பிறகே மாநில அரசு முடிவுகளை எடுக்கும்.


2002 முதல் 2008ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை எம்.பி.யாக பணியாற்றிய சண்முகசுந்தரம், 1996 முதல் 2001 வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.


Also Read | இந்தியாவில் முழு லாக்டவுனை கொண்டு வர மத்திய அரசுக்கு அழுத்தம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR