முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் PMK தலைவர் டாக்டர் ராமதாஸிடம் தொலைபேசியில் வாழ்த்து

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து பெற்றார் என்று பா.ம.க. தலைமை நிலைய செய்தி வெளியிட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 8, 2021, 10:48 PM IST
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் PMK தலைவர் டாக்டர் ராமதாஸிடம் தொலைபேசியில் பேசினார்
  • முதலமைச்சராக பதவியேற்றதற்கு டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்தார்
  • கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தொலைபேசியில் பேசுவதாக முதலமைச்சர் தெரிவித்தார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் PMK தலைவர் டாக்டர் ராமதாஸிடம் தொலைபேசியில் வாழ்த்து title=

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து பெற்றார் என்று பா.ம.க. தலைமை நிலைய செய்தி வெளியிட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டதற்காக வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read | MS Dhoniயிடம் இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள்; கார் முதல் குதிரை வரை… 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற விரும்பியதாகவும்,  கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தொலைபேசியில் பேசுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின்  அவர்கள் கூறினார்கள். தமிழக முதலமைச்சரான தமக்கு ஆலோசனைகளை வழங்கும்படியும் மருத்துவர் அய்யா அவர்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டார் என்று பாமகவின் அறிக்கை கூறுகிறது..

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் அவர்களுக்கு தமது உளமார்ந்த வாழ்த்துகளை மருத்துவர் அய்யா அவர்கள் தெரிவித்துக் கொண்டார். முதலமைச்சரிடம் நலம் விசாரித்த மருத்துவர் அய்யா அவர்கள்,  தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்கள் என்று பாமகவின் செய்தியறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read | இந்தியாவில் முழு லாக்டவுனை கொண்டு வர மத்திய அரசுக்கு அழுத்தம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற  ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News