ஒட்டு மொத்த தமிழர்களையும் நன்றி கெட்டவர்கள் என கூறவில்லை என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ரதாகிருஷ்ணன் விளக்கம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹிந்தி திணிப்பிற்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழர்களை நன்றி கெட்டவர்கள் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


இதை தொடர்ந்து, சென்னையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தான் கூறிய சர்ச்சையான கருத்துக்கு விளக்க ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- "தமிழர்கள் நன்றி கெட்டவர்கள் என நான் கூறியது, 8 கோடி தமிழர்களை அல்ல. தமிழ் என்ற வார்த்தையை பயன்படுத்தி அரசியல் நடத்துகின்றவர்களை பற்றி தான் கூறினேன்.


அவர்கள் தமிழை அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அதை வைத்தே பிழைப்பு நடத்துகிறார்கள். தமிழை வளர்ப்பவர்களை அரவணைக்கும் எண்ணம் இவர்களுக்கு இல்லை. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரதமர் உரையாற்றுகின்றபோது அதற்கு நன்றி சொல்லக்கூட யாரும் தயாராக இல்லை.


இதற்கு என்ன அர்த்தம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் காரணங்களால் தான் அவர்கள் பிரதமருக்கு நன்றி சொல்லவில்லை. இதில் இருந்து நான் கூறிய கருத்து ஒட்டுமொத்த தமிழர்களுக்கு எதிரான கருத்து அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது அரசியலை வைத்து வியாபாரம் செய்பவர்கள் பற்றி நான் கூறிய கருத்தாகும் "என அவர் விளக்கமளித்துள்ளார்.