முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி
முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2வது அலையின் தாக்கம் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசியல் தலைவர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை அனைவரும் அடுத்தடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது பாஜக (BJP)மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு (Pon Radhakrishnan) கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள (Coronavirus) பொன். ராதாகிருஷ்ணன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரான இவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது இதனையடுத்து அவர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ALSO READ | கொரோனா காலத்திலும் மது விற்பனையை அனுமதிப்பது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
பொன்னாருக்கு நேற்றிரவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. பரிசோதனையில் கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்துள்ளதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி திமுக எம்.பி. கனிமொழி வரை, பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுக்கு அண்மையில் கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR