சென்னை: இன்று தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது. அவரது பிறந்தநாளையொட்டி,  பல வித நலத்திட்டங்களை இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிகப்பெரிய ஒரு அறிவிப்பாக திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) இன்று அறிவித்தார். 


தங்களது வாழ்க்கையில் பலவித சவால்களையும் சோதனைகளையும் எதிர்கொள்ளும் திருநங்கைகள் (Transgenders) மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இது மிகப்பெரிய நிவாரண செய்தியாக வந்துள்ளது. பொதுவாக, இவர்களால் மற்றவர்களைப் போல இயல்பாக பல வித நடவடிக்கைகளில் ஈடுபட முடிவதில்லை. பொது போக்குவரத்து வாகனங்களில் சென்று வருவதும் இவர்களுக்கு மிகப் பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.


இப்படிப்பட்ட பல நிதர்சன சவால்களை எதிர்கொண்டிருக்கும் திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரணம் ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.


ALSO READ: கருணாநிதி பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்


இது தவிர, கலைஞரின் பிறந்தநாளான இன்று மேலும் பல மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


திருவாரூரில் 6,000 டன் கொள்ளளவில், 30 கோடி ரூபாய் செலவில் நெல் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உலர்களங்கள் அமைக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார். மேலும், தென் சென்னையில் கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், 250 கோடி ரூபாய் செலவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றின் (Coronavirus) போது களப்பணி செய்த இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1,17,184 காவல்துறையினருக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. 


இலக்கியத் துறையிலும் இன்று பல அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து பாராட்டும் வகையில் இலக்கிய மாமணி விருது உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மூன்று எழுத்தாளர்களுக்கு 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசுடன் விருதும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற விருதுகளையும், மாநில விருதுகளையும் பெறும் எழுத்தாளர்களுக்கு வீடு பரிசாக வழங்கப்படும்.


ALSO READ: கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்: கொரோனா நிவாரண திட்டங்களை தொடங்கி வைக்கிறார் தமிழக முதல்வர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR