சென்னை: தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏப்ரல், மே, ஜூன்,  ஜூலை மாதங்களில் வழங்கப்பட்ட அரிசி அளவின் படி நவம்பர் மாதம் வரை ரேஷனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும்.


ஏற்கனவே அதிகபட்சமாக 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 5 கிலோ இலவசமாக வழங்கப்படும். ஜூலை 1 முதல் 3 வரை பணம் கொடுத்து பொருள் பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் ஈடு செய்யப்படும். பணம் கொடுத்து வாங்கியவர்களுக்கு பணம் திருப்பி தரப்படும்.


 


READ | 80 கோடி மக்களுக்கு ஏப்ரல்-நவம்பர் வரை இலவச ரேஷன் பொருட்கள்: அரசு


 


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் இன்று மேலும் 4,150 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 4,150 பேரில் சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 66,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 


தமிழகத்தில் 95 ஆய்வகங்கள் (அரசு - 49 மற்றும் தனியார் - 46) உள்ளன. அதில், இன்று மட்டும் 34,831 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 13 லட்சத்து 41 ஆயிரத்து 715 மாதிரிகள் சோதனையிடப்பட்டன. இன்று கொரோனா உறுதியானவர்களில்,  2,481 பேர் ஆண்கள், 1,669 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 68,085 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 43,044 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 22 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 2,186 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 62,778 ஆக உள்ளது.


 


READ | குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் ரேஷன் வழங்கப்பட வேண்டும்


இந்நிலையில் நாளுக்கு  நாள் கொரோனாஅதிகரித்து வரும் நிலையில் நவம்பர் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இதையடுத்து, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரசி உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் வருகிற நவம்பர் மாதம் இலவசமாக வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார்.