தாங்குமா தமிழகம்? 2020-ல் 5 சூறாவளிகள்: எது தொட்டுச் சென்றது? எது தட்டிச் சென்றது?
சூறாவளிகள் அதி வேகதில் காற்றை வீசச்செய்வது மட்டுமல்லாமல், புயலுக்கான தீவிரத்துடன் கனத்த மழையையும் பெய்யச்செய்கின்றன.
இந்த ஆண்டு வங்காள விரிகுடா மற்றும் அரேபிய கடலில் தோன்றிய ஐந்து சூறாவளிகளில் நான்கு கடுமையான சூறாவளி புயல் வகையில் இருந்தன. இதில் சூப்பர் சூறாவளியாக உருவெடுத்த ஆம்பன் சூறாவளியும் அடங்கும்.
மழைக்காலத்திற்கு முந்தைய காலத்தில் அரேபிய கடலிலும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான பருவமழைக்கு பிந்தைய மாதங்களில் வங்காள விரிகுடாவிலும் சூறாவளிகள் உருவாவது வழக்கமான விஷயம்தான்.
இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) இயக்குநர் ஜெனரல் மிருதுஞ்சய் மொஹாபத்ரா கூறுகையில், 1990 முதல் நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் (வங்காள விரிகுடா மற்றும் அரேபிய கடல்) கடல்களில் ஒவ்வொரு ஆண்டும் நான்கு சூறாவளிகள் உருவாகி இருக்கின்றன என்று கூறினார்.
"ஆண்டுக்கு ஐந்து சூறாவளிகள் வருவது இயல்புதான்" என்றார் அவர்.
'ஆம்பன்' (Amphan) இந்த ஆண்டின் முதல் சூறாவளியாக வந்தது. இது வங்காள விரிகுடாவில் உருவாகி ஒரு 'சூப்பர் சூறாவளி புயலாக' தீவிரமடைந்தது. ஒடிசாவில் உருவான சூப்பர் சூறாவளி, 1999 ல் அந்த மாநிலத்தையே நாசமாக்கியது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு வந்த முதல் சூப்பர் சூறாவளி ஆம்பன் சூறாவளி.
எனினும், ஆம்பன் ஒரு 'மிகக் கடுமையான சூறாவளி புயலாக' மாற சற்று பலவீனமடைந்து. மே 19 அன்று மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் கடற்கரைகளைத் தாக்கியது. ஆம்பன் புயலால் மேற்கு வங்கம் (West Bengal) அதிகமாக பாதிக்கப்பட்டது. தமிழகத்திலும் இதன் கடுமையான தாக்கம் தெரியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகவும் லேசான விளைவுகளையே இது தமிழகத்தில் (Tamil Nadu) ஏற்படுத்தியது.
அரபிய கடலில் பதினைந்து நாட்களுக்குள் அடுத்த காற்றழுத்த சுழற்சி உருவானது. 'நிசர்கா' என்று அழைக்கப்பட்ட இந்த புயல் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்தது. இந்த புயல் மும்பைக்கு அருகிலுள்ள அலிபாக் பகுதியைத் தாக்கியது. இதன் காரணமாக, கேரளாவில் வழக்கமான தேதியான ஜூன் 1 அன்று பருவ மழை துவங்கியது. இந்த புயலால் தமிழகத்துக்கு பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கடந்த ஒரு மாதத்தில், வங்காள விரிகுடாவில் (Bay of Bengal) இரண்டு, அரேபிய கடலில் ஒன்று என மூன்று சூறாவளிகள் உருவாகியுள்ளன.
'கதி' சூறாவளி மிகவும் கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடைந்தது. இது தீவிரமடையும் கட்டத்தில் மேற்கு கடற்கரையை பாதித்தது. இதன் தாக்கத்தால் கேரளாவில் அதிக மழை பெய்தது. எனினும், அது நவம்பர் 23 அன்று சோமாலியா கடற்கரையை கடந்தது. தமிழகத்தில் இந்த புயல் காரணமாக சில இடங்களில் மழை பெய்தாலும், அதிக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எனினும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
அதே நேரத்தில் வங்காள விரிகுடாவில் மற்றொரு சூறாவளி உருவாகிக் கொண்டிருந்தது.
'நிவர்' சூறாவளி (Cyclone Nivar) ஆரம்பத்தில் 'கடுமையான சூறாவளி புயல்' என்று கணிக்கப்பட்டது. இருப்பினும், இது ஒரு 'மிகக் கடுமையான சூறாவளி புயலாக' தீவிரமடைந்து, நவம்பர் 25 இரவு தமிழக கடற்கரையைத் தாண்டியது. பலத்த மழையுடன் கூடிய அதிக தாக்கம் கொண்ட புயலாக நிவர் புயல் தமிழகத்தை தாக்கியது. பல வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பரவலாக பெய்த மழையால் பல இடங்களில் நீர் தேக்கங்கள் ஏற்பட்டன. கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்களைப் போல் நிலைமை மோசமடையவில்லை என்றாலும், இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
ALSO READ: நகர்ந்தது நிவர்: புயலை திடமாக எதிர்கொண்டு நிமிர்ந்தது தமிழகம்
நிவர் கடந்து சென்ற ஒரு வாரத்திற்குள், மற்றொரு புயல் உருவாகி ஒரு சூறாவளி புயலாக தீவிரமடைந்தது. 'புரெவி' சூறாவளி (Cyclone Burevi) நவம்பர் 2 ஆம் தேதி இலங்கைக் கடற்கரையைக் கடந்தது. ஆனால் அது தென் தமிழகக் கடற்கரையைத் தாண்டும்போது, அதன் தீவிரம் ஆழ்ந்த காற்றழுத்தமாகக் குறைந்தது. இந்த சூறாவளியின் போது, பல மாவட்டங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவு மழை பெய்ததோடு, விளை நிலங்களுக்கு அதிக சேதம் ஏற்பட்டது.
சூறாவளிகள் அதி வேகதில் காற்றை வீசச்செய்வது மட்டுமல்லாமல், புயலுக்கான தீவிரத்துடன் கனத்த மழையையும் பெய்யச்செய்கின்றன.
மிகவும் கடுமையான சூறாவளி புயல் மணிக்கு 120-160 கிலோமீட்டர் வேகத்தில் காற்றின் வேகத்தைக் கொண்டிருக்கும். மேலும் மரங்களை வேரோடு பிடுங்கவும், தகவல்தொடர்பு பாதைகளை சேதப்படுத்தவும், குடிசைகளை சேதப்படுத்தவும் தேவையான தீவிரம் இதில் காணப்படும்."
மிகவும் கடுமையான சூறாவளி புயல் ஒரு மணி நேரத்திற்கு 160 முதல் 220 கிலோமீட்டர் வேகத்தில் காற்றின் வேகத்தைக் கொண்டிருக்கும்.
ALSO READ: டெல்டா பகுதிகளில் பலத்த மழையால் பெரும் பாதிப்பு: சிதம்பரம் கோயிலில் மழை நீர் புகுந்தது
ஆம்பன் சூறாவளியின் போது, கடல் நீர் நிலத்துக்குள் சென்ற வேளையில், புயல் சீற்றத்தின் தீவிரம் 10 மீட்டராக இருந்தது என IMD தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு முடியப்போகிறது. இந்த மாதத்தின் மீதமுள்ள நாட்களில், அடுத்த புயல் வருவதற்கான சாத்தியம் உள்ளதா? குறைந்தபட்சம் அடுத்த 7 நாட்களுக்கு எந்த புயலும் உருவாகாது என்கிறது IMD.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR