கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 11 தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டு கடந்த ஆண்டு சென்னை மெரினாவில் மாபெரும் போராட்டத்தை மக்கள் நடத்தியதில் ஜல்லிகட்டு போட்டிக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் வருகின்ற ஜனவரி 14-ம் தேதி தமிழர்களின் பண்பாடான ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்கி, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு  நடைபெற்று வருகிறது.


பொங்கல் திருவிழா கொண்டாடப்பட இருக்கும் நிலையில், மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு வெகுவிமரிசையாக நடைபெறும். இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பலரும் பங்கேற்பர்.


இதனைத் தொடர்ந்து வரும் 14 தேதி மதுரையில் உள்ள அவனியாபுரத்திலும்,16-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த போட்டிகளுக்கான முன்பதிவு தற்போது நடந்து வருகிறது. முன்பதிவு செய்யும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. 


போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளின் உரிமையாளர்களும் தங்களின் ஆதார் அட்டை அல்லது ரேஷன் அட்டையை காட்டி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். முன்பதிவு செய்துகொள்ள ஆதார் கட்டாயம் என்று முதலில் கூறப்பட்டது, ஆனால் ஆதார் அட்டை கட்டாயம் என்பதில்லை என்றும் ரேஷன் அட்டை வைத்தும் முன்பதிவு செய்யலாம் என்றும் விழா கமிட்டி அதிகாரிகள் கூறியுள்ளனர்.


இதையொட்டி 3 ஊர்களிலும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காளைகள் நிறுத்தி வைக்கப்படும் தொழு, வாடிவாசல் மற்றும் காளைகள் வெளியேறும் பகுதி, பார்வையாளர்கள் அமரும் பகுதியில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் 4 அடி உயரம், 3 வயது, 2 பற்கள் இருக்க வேண்டும். காளை உரிமையாளர்கள் தங்களது பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர்களிடம் பரிசோதித்து தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வரப்படும்போது, மேற்படி தகுதிச் சான்று உள்ள காளைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். தகுதிச் சான்று சரிபார்க்க கால்நடை மருத்துவர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.


மேலும், ஜன.16-ஆம் தேதி நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்க ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிகிறது. மாவட்ட நிர்வாகத் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை யென்றாலும், முதல்வர் வருகைக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.