வீட்டில் பதுக்கியிருந்த ₹20 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 20 லட்சம் மதிப்புள்ள 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள செங்கட்டாம்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ய செய்வதாக ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கையில், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 20 லட்சம் மதிப்புள்ள 250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன் பேரில் பட்டிவீரன்பட்டி நிலக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் 9 (TN Police) சுகுமாரன் மற்றும் பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளர் சங்கரேஸ்வரன் தலைமையிலான காவல்துறையினர் வீட்டை சோதனையிட்டனர். அப்போது அங்கு வெளிமாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 20 லட்சம் மதிப்பிலான 250 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ALSO READ | மதுரை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை
இதனை அடுத்து நாட்ராயன், சேதுபதி மற்றும் நவீன்குமார் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா கடத்த பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்பி. சீனிவாசன் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இது குறித்து அவர் கூறும்போது, கஞ்சா விற்பனை செய்வதோ, வைத்திருப்பது தெரியவந்தால் பொதுமக்கள் எந்த நேரமும் போலீசாருக்கு தகவல் கொடுத்தால் உடனே தடுப்புக் காவல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும், சிறப்பாக செயல்பட்டு கஞ்சா பறிமுதல் செய்த காவலர்களுக்கு எஸ்.பி., சீனிவாசன் சன்மானம் வழங்கினார்.
ALSO READ | அன்னபூரணியை இயக்குவது கருப்பர் கூட்டம் தான்: அர்ஜுன் சம்பத்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR