சென்னை: நாட்டில் வேகமாக பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் கடுமையாக ஊரடங்கு விதிக்கப்பட்டது. அனைவரும் வீட்டிலேயே முடங்கினார். இதனால் பொருளாதாரம் (Indian Economy) மிகவும் பாதிக்கப்பட்டது. அனைத்து மாநிலங்களும் பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல தமிழகத்திலும் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செலவினங்களை குறைத்து நிதிநிலையை சீராக்க பல நடவடிக்கைகளை எடுத்தது. அதில் ஒன்று, கொரோனா காலத்தில் அரசு துறைகளில் புதிய பணியிடங்களை நிரப்பக்கூடாது என தமிழக அரசு (TN Govt) அறிவித்தது. புதிய பணியிடங்கள் ஏற்படுத்தவும் தடை விதித்தது. 


தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் (Coronavirus in Tamil nadu) பாதிப்பு குறைந்து வருவதால், தற்போது அரசு துறைகளில் ஆரம்பநிலை பணியாளர்களை நியமனம் செய்வதில் எந்த தடையும்  இல்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுக்குறித்து தமிழக அரசு சார்பில் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


ALSO READ |  அரசு அலுவலகங்களில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை: தமிழக அரசு அறிவிப்பு



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR