CHENNAI: கொரோனா காலங்களில் சனிக்கிழமையும் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பழைய நடைமுறையான 5 வேலை நாட்கள் மட்டுமே கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு (TN Govt) அறிவித்துள்ளது.
முன்னதாக கொரோனா (COVID-19) காலத்தில் ஊரடங்கு (Lockdown) உத்தரவின் போது பல பணிகள் முடங்கியது. அந்த பணிகளி முடிக்கவும், வேலை நாட்களின் இழப்பை ஈடுசெய்வும் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் இனி வாரத்தில் 6 நாட்கள் வேலைநாட்களாக இருக்கும் என தமிழக அரசு அறிவித்தது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை அலுவலகங்கள் செயல்படும் என்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அலுவலகங்களில் நிலுவையில் உள்ள கோப்புகள், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், பணியாளர்கள் வருகை பதிவை பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், இன்று அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பழைய நடைமுறையான 5 வேலை நாட்கள் மட்டுமே கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு (TN Govt) அறிவித்துள்ளது.
ALSO READ | “அம்மாவின் அரசாங்கம் கணிசமான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளது” EPS பெருமிதம்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR