கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சையை தெரியாதவர்கள் இருக்க முடியாது.அவர்  தமிழ்நாட்டை சேர்ந்தவர். மதுரையில் ரகுநாத பிச்சை, லக்ஷ்மி தம்பதியினருக்கு பிறந்த சுந்தர் பிச்சை,  வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். அவரது பள்ளிக் காலங்கள் சென்னையில் தான் கழிந்தது. இந்நிலையில், சுந்தர் பிச்சையின் பெற்றோர்,  அவர் வளர்ந்த சென்னையில் உள்ள தங்கள் குடும்ப வீட்டை விற்றுள்ளனர் என்று தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. சென்னை நகரின் அசோக் நகர் பகுதியில் உள்ள நிலத்தில் இருந்த அவரது தந்தை வீட்டை இடித்து பின் அவர் விற்றார். அந்த வீட்டை வாங்கியவர் தமிழ் நடிகரும் தயாரிப்பாளருமான சி மணிகண்டன் என்றும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டின் மதுரையில் ஸ்டெனோகிராஃபராக பணியாற்றிய லக்ஷ்மி மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரான ரகுநாத பிச்சை தம்பதிகளுக்கு பிறந்த சுந்தர் பிச்சை, ஐஐடி-காரக்பூரில் சேருவதற்கு முன்பு தனது பள்ளிப் படிப்பை  சென்னையில் ஜவஹர் வித்யாலயா சீனியர் செகண்டரி ஸ்கூல் மற்றும் வன வாணி பள்ளியில் பயின்றார். "சுந்தரின் தந்தை, இது அவரது முதல் சொத்து என்பதால் ஆவணங்களை ஒப்படைக்கும் போது சில நிமிடங்கள் மனம் உடைந்து, கண்ணீர் சிந்தினார்" என்று மணிகண்டன் தி இந்துவிடம் கூறினார்.


புதிய உரிமையாளர், சுந்தர் பிச்சையின் பெற்றோர் குறித்து மேலும் கூறுகையில், வீட்டை விற்பதற்கான ஆவணங்கள் பணியை விரைந்து முடிக்க, தங்கள் மகனின் பெயரைப் பயன்படுத்தாத பிச்சையின் பெற்றோரின் பணிவுணர்வை நினைவு கூர்ந்தார். "சுந்தரின் பெற்றோரை முதலில் சந்திக்கும் போது, சுந்தரின் அம்மா தானே ஃபில்டர் காபி தயாரித்து கொண்டுத்ததோடு முதல் சந்திப்பிலேயே அவரது தந்தை எனக்கு ஆவணங்களையும் வழங்கினார்," என்று மணிகண்டன் தனது சந்திப்பை நினைவு கூர்ந்தார்.


மணி கண்டன் அவரது பெற்றோர் குறித்து மேலும் கூறுகையில், "சுந்தர் பிச்சையின் தந்தை பதிவு அலுவலகத்தில் மணிக்கணக்கில் காத்திருந்தார், ஆவணங்களை என்னிடம் ஒப்படைப்பதற்கு முன்பு தேவையான அனைத்து வரிகளையும் செலுத்தினார்," என்று கூறினார், மேலும் நிலத்தை ஒப்படைக்கும் முன் வீட்டை இடிக்கும் செலவை ஏற்றுக்கொண்டார்.


மேலும் படிக்க |  போலி புகைப்படங்களுக்கு ஆப்பு வைத்த கூகுள்..! ஏஐ போலிகளை இப்படி அடையாளம் காணலாம்


சென்னையில் உள்ள அசோக் நகர் வீட்டை விற்பனை செய்துவிடலாம் என ரகுநாத பிச்சை முடிவு செய்ததை தொடர்ந்து அந்த தகவல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சி.மணிகண்டனுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, சுந்தர் பிச்சை வசித்த வீடு என்பதை அறிந்ததும் உடனடியாக வாங்க முடிவு செய்ததாக மணிகண்டன் கூறினார். "சுந்தர் பிச்சை நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார், அவர் வசித்த வீட்டை வாங்குவது எனது வாழ்வின் பெருமைக்குரிய சாதனையாகும்" என்று அவர் கூறினார். பிச்சையின் தந்தை அமெரிக்காவில் இருந்ததால் ஒப்பந்தம் முடிவடைய நான்கு மாதங்கள் எடுத்ததாக மணிகண்டன் கூறினார். நடிகர்-தயாரிப்பாளரான மணிகண்டன், மேலும் கூறுகையில், சுந்தர் பிச்சையின் சொத்து அல்ல, தன் மகன் கூகுள் தலைமை அதிகாரியாக இருந்தும், அதனை சிறிதும் பயன்படுத்திக் கொள்ளாத பெற்றோரின் பணிவுதான் அவரை நிலைகுலைய வைத்துள்ளது என்று கூறியுள்ளது.


சுந்தர் பிச்சை தற்போது அமெரிக்காவில் கலிபோர்னியாவில் 31.17 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆடம்பர வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டை 40 மில்லியன் டாலருக்கு சுந்தர் பிச்சை வாங்கியுள்ளார். மணிகண்டன் ஒரு ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் என்றும், தனது பிராண்டான செல்லப்பாஸ் பில்டர்ஸ் கீழ் சுமார் 300 வீடுகளை கட்டி டெலிவரி செய்துள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. இந்த இடத்தில் மணிகண்டன் வில்லா கட்டுவார் என்றும், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | அட... கூகுள் தகவல் மட்டும் கொடுக்கலை... ‘இவற்றை’ எல்லாம் கூட கொடுக்கிறது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ