Gossip Tamil : ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு ஓடிவந்த குசும்பன், டீ மாஸ்டரிடம் ‘அண்ணே சூடா ஒரு டீ போடுங்க’ என்றான். ’எங்கப்பா போன’ என மாஸ்டர் கேட்க, ’கொஞ்சம் முக்கியமான விஷயத்தை விசாரிச்சுட்டு வர்றப்போனேன் ணா, சொல்றேன் கேளுங்க’ என ஆரம்பித்தான் குசும்பன். ‘ அண்ணே ராஜ்பவனார் பதவி ஆகஸ்ட் மாதம் முடியப்போகுதுல்ல, அதுசமந்தம்மா அண்மையில அவரு டெல்லி போய்ட்டு வந்தாரு. மேலிடத்துக்கிட்ட தனக்கு இங்க இருக்கிற நெருக்கடிய சொன்னவரு, வேறு எங்கையாவது போஸ்டிங் போடுங்கனு வலியுறுத்தியிருக்காரு. அப்போ தான், என்ன விஷயம்னு விலாவரியா சொல்லுங்கனு டெல்லி மேலிடம் இவருகிட்ட கேட்டிருக்கு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கிசுகிசு : சேட்டைக்காரரின் தகிடுதத்ததால் கலகலக்கும் இயக்குநரின் குடில் கட்சி..!


அப்போ, இங்க எனக்கு உரிய மரியாதை இல்ல. என்ன பண்ணாலும் அது எனக்கே ஆபோசிட்டா போகுது. நான் எடுக்கிற நடவடிக்கைக்கு ஒரு பலனும் இல்ல. ஏதோ கைய கட்டி போட்ட மாதிரி இருக்கு. அதனால், என்ன இங்க இருந்து மாத்திடுங்கனு சொல்லியிருக்கிறாரு ராஜ்பவனார். டெல்லி மேலிடமோ, உங்களை அங்க இருந்து மாத்துற ஐடியா இல்ல. எல்லா ஸ்டேட்ஸூக்கும் மாத்துற லிஸ்ட் ரெடியா இருக்கு. உங்க பேரு அந்த லிஸ்டுல இல்ல. இன்னும் கொஞ்ச நாளைக்கு அங்கேயே இருங்க. உங்களவுக்கு அங்க யாராலும் இருக்க முடியாது. வேண்டும் என்றால், நீங்க விரும்புற விஷயத்தை செஞ்சி தர்றோம் என சொல்லியிருக்கு.


அப்போது தான் தன்னோட மனசுல இருந்த முக்கியமான விஷயத்தை சொல்லியிருக்கிறாரு ராஜ்பவனார். அங்க கேபினட்ல இருக்கிற ஒருத்தரு என்ன ரொம்ப அவமானப்படுத்துனாரு. அவருமேல நீங்க நடவடிக்கை எடுக்குற மாதிரி தெரியல. அவரு உள்ள போகமலேயே கேபினட்ல இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் அதே இடத்துக்கு வந்துட்டாரு. அவருக்கும் எனக்கும் கொஞ்சம்கூட செட் ஆக மாட்டேங்குது. என்னோட அதிகாரத்துக்கு கீழ வர்ற துறையவே அவரு வச்சிருக்கிறாரு. அதனால அடிக்கடி ரெண்டு பேருக்கும் கிளாஷ் ஆகுது. 


அவரோட ஒவ்வொரு நடவடிக்கையும் என்ன ரொம்ப இரிடேட் பண்ணுது, பெண்டிங்கில் இருக்கிற கேஸ்ல ஏதாவது நடவடிக்கை எடுங்க-னு தன்னோட ஆதங்கத்தை கொட்டித் தீர்த்திருக்காரு. இதைக் கேட்ட டெல்லி, சரி நீங்க போங்க, நீங்க எதிர்பார்க்குற விஷயம் நடக்கும்னு சொல்லி சமாதானம் பண்ணி ராஜ்பவனார அனுப்பி வச்சிருக்கு. அதன்பிறகு தான் இப்போ இங்க கேபினட்டில் இருக்கும் அந்த ’பொன்’ ஆனவர் மேல அமலாக்கத்துறை வழக்கு துரிதமாகிட்டு இருக்கு. அவரோட சில சொத்துகளையும் முடக்கியிருக்கு. இன்னும் அடுத்தடுத்த நாட்களில் விசாரணை உள்ளிட்ட விஷயங்கள் துரிதமாகவும் வாய்ப்பு இருக்கு." என கதையை சொல்லி முடித்த குசும்பன், டீயையும் குடித்து முடித்துவிட்டு போய்ட்டு வர்றேண்ணா என சொல்லிட்டு கிளம்பினான். 


மேலும் படிக்க | கிசுகிசு : பம்பரக் கட்சி வாரிசுவின் துடுக்கு பேச்சு.. நோஸ்கட் செய்யும் சூரிய கட்சி ஜூனியர்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ