பொங்கல் பரிசு விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு -தமிழக அரசு
பொங்கல் பரிசு விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளதால், அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் சிறப்பான பொங்கல் பரிசை அறிவித்து, வழங்கி வருகிறது. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்படுகிறது.
ஆனால் அனைவருக்கும் பொங்கல் பரிசு என்ற அறிவிப்பை எதிர்த்து டேனியல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பல கேள்விகளை எழுப்பியதோடு, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தான் பொங்கல் பரிசு வழங்க வேண்டும். வறுமை கோட்டிற்கு மேலுள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கக் கூடாது எனக்கூறி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.