Governor RN Ravi: சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் அதிகாலை கைது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், இதய ரத்தகுழாய்களில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்றிரவு மாற்றம்


இதை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக செந்தில் பாலாஜியை சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் அவர்கள் தரப்பு தெரிவித்தது. இதற்கு, அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், அவர் நேற்றிரவு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 


ஸ்டாலின் பரிந்துரை


அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்காவான மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை வேறு அமைச்சர்களுக்கு மாற்ற முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மதியம் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பரிந்துரை செய்தார். அதாவது, மின்சாரத்துறையை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை முத்துசாமிக்கும் ஒப்படைத்து, செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக அமைச்சரவையில் தொடர முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரைத்திருந்தார். 


மேலும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய மொட்டை அடித்து சிறப்பு பிரார்த்தனை


ஆளுநரின் மறுப்பு


இதையடுத்து, அந்த பரிந்துரையில் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக இலாக்கா மாற்றப்படுகிறது என குறிப்பிட்டிருந்த ஏற்க மறுத்த ஆளுநர், அந்த பரிந்துரைக்கான காரணத்தை 'Misleading and Incorrect' என குறிப்பிட்டதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த மறுப்புக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உடனடியாக பதில் கடிதம் அளிக்கப்பட்டது. 


ஆளுநர் மாளிகை செய்திகுறிப்பு



தற்போது ஒப்புதல்


அந்த வகையில், ஆளுநர் இந்த இலாக்கா மாற்ற பரிந்துரையை ஏற்க மறுத்தால், இரண்டு  துறைகளுக்கு அமைச்சர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் இலக்கா மாற்ற பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 


அமைச்சராக தொடர்வதை ஏற்க முடியாது


இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,"அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறைகளில் ஒன்றான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை முத்துசாமிக்கும் மாற்றி ஒதுக்கி முதலமைச்சர் பரிந்துரைத்தற்கு, ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். கிரிமனல் நடவடிக்கை ஆளாகியுள்ள நபர் அமைச்சராக தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதனால், செந்தில் பாலாஜியின் இலக்கா மாற்றப்பட்டாலும், அவர் இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர வாய்ப்பில்லையா என கேள்வியெழுகிறது. இருப்பினும், இதனை தெரிவிக்க ஆளுநருக்கு தார்மீக உரிமையில்லை என கூறப்படும் நிலையில், முதலமைச்சருக்கு உண்டான அதிகாரத்தை பயன்படுத்தி விரைவில் தமிழ்நாடு அரசு இதுகுறித்த நிர்வாக ரீதியான அரசாணையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறை செல்வது உறுதி: அண்ணாமலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ