அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய மொட்டை அடித்து சிறப்பு பிரார்த்தனை

Senthil Balaji Latest News: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய வேண்டி மாரியம்மன் கோவிலில் மொட்டை அடித்தும், அங்க பிரதட்சணம் செய்தும் சிறப்பு பிரார்த்தனை செய்த அவரது ஆதரவாளர்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 16, 2023, 04:46 PM IST
  • அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய சிறப்பு பிரார்த்தனை செய்த அவரது ஆதரவாளர்கள்.
  • செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் -காவேரி மருத்துவமனை பரிந்துரை.
  • தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அழிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய மொட்டை அடித்து சிறப்பு பிரார்த்தனை title=

Minister Senthil Balaji: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நலம் பூரண குணமடைய வேண்டி கரூரில் மாரியம்மன் கோவிலில் மாநகராட்சி மண்டல தலைவர், கவுன்சிலர் மொட்டை அடித்தும், அங்க பிரதட்சணம் செய்தும் சிறப்பு பிரார்த்தனை.

அமைச்சர் செந்தில் பாலாஜி குணமடைய சிறப்பு பிரார்த்தனை:
அமலாக்கத்துறை சோதனையை அடுத்து கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவர் 
சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நலம் பூரண குணமடைய வேண்டி, கரூர் தேர்வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் மாநகராட்சி மண்டல தலைவரும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளருமான சக்திவேல், கவுன்சிலர் பூபதி, மத்திய நகர இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, மத்திய நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சுபாஷ் ஆகியோர் முடி காணிக்கை செலுத்தினர். மேலும், கோவில் வளாகத்தை சுற்றி அங்க பிரதட்சணம் மேற்கொண்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகின்றனர்.

செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை:
கடந்த செவ்வாய்கிழமையன்று காலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலகத்திலுள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வந்த நிலையில், நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்தது. அமலாக்கத் துறை தொடர்ந்து 17 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டதில், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் நடந்த போது அவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில் பாலாஜியை கைது செய்ததில் சட்ட வரம்புகள், மனித உரிமைகள் மீறப்பட்டு உள்ளதாக திமுக தரப்பு குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - செந்தில் பாலாஜியை தரதரவென்று இழுத்துத் தரையில் போட்டுள்ளனர் - கண்ணதாசன் பேட்டி

முதலமைச்சர் மு.ஸ்டாலின் கண்டனம்:
அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்தார். ஆனால் விசாரணைக்கு ஒத்துழைத்தும் மனிதநேயமற்ற முறையில் நெஞ்சுவலி வரும் அளவிற்கு பா.ஜ.க-வின் அமலாக்கத் துறையினர் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது என முதலமைச்சர் மு.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை:
அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலிருந்து நேற்றிரவு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த காவேரி மருத்துவமனை மருத்துவர்கள், செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தனர். மேலும் காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி இருக்கிறார் என காவேரி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு காரணம் என்ன?
தற்போதைய மின்சாரத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது அதில் 100க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார்கள் கொடுக்கப்பட்டன. இதுத் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வந்த நிலையில், அது தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இறுதியாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க - செந்தில்பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News