ஆளுநரின் பாதுகாப்பிற்கு இடையூறு நேர்ந்திருந்தால் கண்டிக்கதக்கது! எம்.பி கார்த்தி சிதம்பரம் கருத்து!
மத்திய அரசு பிரதிநிதியான ஆளுநருக்கு கருத்தியல் ரீதியாக ஜனநாயக முறைப்படி எதிர்ப்பு தெரிவிப்பது என்பது ஏற்கத்தக்கது. அதே நேரத்தில் ஆளுநரின் பாதுகாப்பிற்கு இடையூறு நேர்ந்திருந்தால் அதனை கண்டிக்கிறேன் - எம்.பி கார்த்தி சிதம்பரம்
ஆளுநரின் பாதுகாப்பிற்கு இடையூறு நேர்ந்திருந்தால் கண்டிக்கதக்கது என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவை பார்வையிட்ட காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் ஆளுநரின் பாதுகாப்பிற்கு இடையூறு நேர்ந்திருந்தால் அதனை கண்டிக்கிறேன் என பேசியுள்ளார்.
சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை பார்வையிட்டார் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம். அங்கு வைக்கப்பட்டிருந்த கீழடி அகழாய்வு பொருட்களை பார்வையிட்டதுடன் கலைநிகழ்ச்சியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார்.
மேலும் படிக்க | ஓவர் ஸ்பீட்: ஆப் மூலம் பைக் புக் செய்து பயணித்தவர் பலி..! ஓட்டியவர் எஸ்கேப்..!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு பிரதிநிதியான ஆளுநருக்கு கருத்தியல் ரீதியாக ஜனநாயக முறைப்படி எதிர்ப்பு தெரிவிப்பது என்பது ஏற்கத்தக்கது. அதே நேரத்தில் ஆளுநரின் பாதுகாப்பிற்கு இடையூறு நேர்ந்திருந்தால் அதனை கண்டிக்கிறேன் என தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்திற்கு, அவர் எப்படி காவல்துறை அதிகாரியாக இருந்தார் என்பதில் தனக்கு சந்தேகம் உள்ளது என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
அண்ணாமலை இளையராஜாவிற்கு தேசிய விருது வழங்க பரிந்துரைப்பது என்பது அவரது ஜனநாயக உரிமை என்றும் பேசினார். காங்கிரஸுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி வழங்கப்படுமா என்கிற கேள்விக்கு திமுக, காங்கிரஸ் தேர்தல் உடன்பாடின்படி ஒரு எம்.பிக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.
மேலும் படிக்க | ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சர்வாதிகாரியாக இருக்கக்கூடாது: தமிழிசை
மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் பகுதியில் நேற்று ஆளுநர் தருமையாதீன நிகழ்ச்சிக்கு சொல்லும்போது அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை தூக்கி வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். அதிமுக வெளிநடப்பு செய்த பிறகு சட்டப்பேரவையில் பேசிய மு.க.ஸ்டாலின், அரசின் விளக்கங்களை கேட்ட பிறகு அதிமுக வெளிநடப்பு செய்திருந்தால் சரி என்று தெரிவித்தார். ஆளுநரின் வாகனம் மீது கருப்புக் கொடியோ, கற்களோ வீசப்பட்டதாக கூறப்படுவதில் உண்மையில்லை என காவல்துறை உறுதிபடுத்தியுள்ளதாகவும் கூறினார். அதோடு போராட்டம் நடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்கட்சியின் கோரிக்கை நியாயமானது என்றும் பேசினார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR