அம்மா உணவகத் திட்டத்திற்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு
தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் அம்மா உணவகத் திட்டத்துக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் அம்மா உணவகத் திட்டத்துக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அம்மா உணவகம் திட்டம் 2013 மார்ச் 19 ஆம் நாள் சென்னை சாந்தோமில், அன்றைய முதல்வர் மற்றும் மறைந்த செல்லவி ஜெயலலிதாவால் தொடங்கப்பெற்றது. முதலில் இது மலிவு விலை சிற்றுண்டி உணவகம் என்ற பெயரில் தான் இயங்கியது. ஆனால் அதே மாதத்தில் மார்ச் 23 ஆம் தேதி "அம்மா உணவகம்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
2020 தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்....
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறப்பட்டது. மேலும் அதன் செயல்பாடுகளும், முன்பு போல இல்லை என்ற குற்றசாட்டும் எழுந்தது.
இதனையடுத்து அம்மா உணவகத்தை மேம்படுத்தவும், அதன் செயல்பாடுகளை சரி செய்யவும் தமிழக அரசு தொடர்ந்து ஆலோசனை செய்து வந்தது. அதன் அடிப்படையில் அம்மா உணவகத் திட்டத்திற்கு கூடுதலாக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.