கடந்த சில நாட்களுக்கு முன்பு 'கிராண்ட் சன் ஆப் நாகர்கோவில் எம்.எல்.ஏ' என்று வாகன நம்பர் பிளேட்டில் எழுதிவைத்து சுற்றிக் கொண்டிருந்தார் நாகர்கோவிலை சேர்ந்த அம்ரிஷ். அவர் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்த இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. வாகன எண் இருக்க வேண்டிய இடத்தில் தனது அதிகாரத்தைக் காட்டும் வகையில் எம்.எல்.ஏவின் உறவினர் என்று எழுதி இருக்கிறார் அம்ரிஷ்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்ற கலைவாணர் அரங்கில் ரஜினி பாடல் ஒலிக்க‌ இரண்டு போலீசாருடன் அவர் நடந்து வரும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. இதையும் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் அம்ரிஷ். அந்த வண்டியில் வழக்கறிஞர் ஸ்டிக்கரும் ஒட்டி இருக்கிறார். இதையடுத்து, வக்கீலுக்கு படித்துவிட்டு சட்டத்தையே மதிக்காமல் இருப்பதாகவும் நெட்டிசன்கள் அம்ரீஷை வறுத்தெடுத்தார்கள்.


 



 


மேலும் படிக்க | பழமையான கோவில்களின் புணரமைப்பில் ‘அலட்சியம்’ வேண்டாமே!


நாகர்கோவில் எம்.எல்.ஏ காந்தி தன்னுடைய கொள்கைக்காக திருமணமே செய்து கொள்ளாதவர். அப்படி இருக்கும்போது அம்ரிஷ் காந்தியை தாத்தா என கூறுகிறாரே என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில்
எம்.ஆர். காந்தியே தற்போது அதுகுறித்து அறிக்கை வாயிலாக விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில் நாகர்கோவிலில் என் பேரன் என்று சொல்லி வாகனத்தில் 'ஸ்டிக்கர்' ஒட்டிக் கொண்ட பையன் என் 25 ஆண்டு கால உதவியாளர் கண்ணன் என்பவரின் மகன். அவரது தவறுகளை சரி செய்து கொள்ள அறிவுறுத்தி உள்ளேன். தமிழகம் முழுதும் என் மீது அன்பும் பற்றுதலும் கொண்ட ஒவ்வொருவரும் என் சகோதர சகோதரியர் மகள் மகன் பேரன் பேத்தி ஸ்தானத்தில் உள்ளவர்களே. எனக்கு இயக்கம்தான் குடும்பம். இயக்கத்தை சார்ந்த அனைவரும் என் உறவினர்கள். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.


 



 


யார் இந்த அம்ரிஷ் என விசாரித்ததில் அவர் நாகர்கோவில் எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி-யின் உதவியாளர் கண்ணனின் மகன் என்பது தெரியவந்துள்ளது. எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ ஆனதும் டிரைவராக இருந்த அம்ரிஷின் தந்தை கண்ணன் காந்தியின் உதவியாளராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். கண்ணனுக்கு இரண்டு மகன்கள் அதில் அம்ரிஷ் என்பவர் 'அம்ரிஷ் பி.ஜே.பி' என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட போட்டோதான் தற்போது வைரலாகியுள்ளது. 


மேலும் படிக்க | விடாமல் கலாய்க்கும் திமுகவினர்... அசராமல் டஃப் கொடுக்கும் அண்ணாமலை: நடந்தது என்ன?


இந்த நிலையில் நெட்டிசன்களின் தொடர் எதிர் கருத்துக்களாலும்  எம்.எல்.ஏ-வாக காந்தி-யின் அறிவுறுத்தலாலும் தற்போது தன் பேஸ்புக் பக்கத்தை முடக்கி அவரும் முடங்கியுள்ளார். சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்ற கலைவாணர் அரங்கில் ரஜினி பாடல் ஒலிக்க‌ இரண்டு போலீசாருடன் அவர் நடந்து வந்த வீடியோவும் வெளியான நிலையில் அவருடன் வந்த காவலர்கள் யார் என விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR