MK Stalin Latest News: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள அத்திகடவு மலை கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாம் இன்று (ஜூலை 2) நடைபெற்றது. இதில் காரமடை வனச்சரக பகுதிகளான அத்திகடவு, முள்ளி, குண்டூர், பூச்சி மரத்தூர், பில்லூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நலத்திட்ட உதவிகள் 


இந்த நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா கலந்துகொண்டு பழங்குடியின மக்களுக்கான இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு மற்றும் தாட்கோ மூலம் தனிநபர் கடன், மகளிர் குழு கடன், ஊட்டசத்து பெட்டகம் என சுமார் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட  உதவிகளை வழங்கினார்


மேலும் படிக்க | பாட்டில்களுக்கு குட்பை சொல்ல டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம் - அமைச்சர் முத்துசாமி


50 ரூபாய் பிடித்தம்


இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய ஆ, ராசா, "அண்மையில் தமிழகம் முழுவதும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் ஊதிய உயர்வு பிரச்சினை குறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தூய்மை பணிக்காக புதிதாக ஒப்பந்தம் எடுத்தவர்கள் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக உபகரணங்கள் வாங்க 50 ரூபாய் ஊதியத்தில் பிடித்தம் செய்வதாக தன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


இனி அரசே ஏற்கும் 


இதுகுறித்து உடனடியாக முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்து சென்றேன். அந்த கோரிக்கை குறித்து தான் கூறிய 20 நிமிடங்களில் சம்பந்தப்பட்ட அமைச்சரை அழைத்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஒப்பந்த துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பிற்காக பிடித்தம் செய்யும் 50 ரூபாயை இனி அரசே செலவிடும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


நீண்ட நாள் கோரிக்கை


மேலும், பில்லூர் பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவமனை வேண்டும் என்பது வரும் நிதியாண்லேயே நிறைவேற்றப்படும். இந்த மாதத்திலேயே உயிர் காக்கும்  ஆம்புலன்ஸ் சேவை பில்லூர் பகுதியில் தொடங்கப்படும்" என்றார். 


தூய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது அடிப்படை உரிமையாக உள்ள நிலையில், ஒப்பந்த பணியாளர்களின் நிலை மிகவும் கவலைகிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் தங்களுக்கான உரிமை மற்றும் அடிப்படை ஊதிய பிரச்னைகளுக்காக தொடர்ந்து போராடி வருவது ஆங்காங்கே காண முடிகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் தூய்மை பணியாளர்கள் தனியாரால் ஒப்பந்தம் செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | கரூரில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் - கிரஷர் உரிமையாளர்கள் கோரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ