தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ மே மாதம் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிட்டபடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் குரூப் 2 மற்றும் 2 ஏ பணிகளுக்கு ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகள் மூலம் 5529 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வுக்குப் பின்பு இந்த எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேர்முகத் தேர்வு உள்ள குரூப் 2 தேர்வின் மூலம் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பட உள்ளன.


மேலும் படிக்க | TNPSC: Group 4 புதிய பாடத்திட்டம் வெளியீடு


நேர்முகத் தேர்வு அல்லாத, அதாவது குரூப் 2 ஏ தேர்வு மூலம் நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் (ஏஎஸ்ஓ), உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், அரசின் பல்வேறு துறைகளின் உதவியாளர், நேர்முக எழுத்தர், தலைமை செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சியில் தனிப்பட்ட எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன.


கல்வித் தகுதி


அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கு கூடுதலாக தட்டச்சு முடித்திருக்க வேண்டும். சில பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 


வயது வரம்பு


பொதுபிரிவினருக்கு 18 முதல் 32 வரை இருக்க வேண்டும். மற்ற வகுப்பினர்களுக்கு வயது வரம்பு கிடையாது.


தேர்வு முறை


முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என இரு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. 


தேர்வு நடைபெறும் நாள்


குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகளுக்கான முதல் நிலைத் தேர்வு 21.05.2022 அன்று நடைபெறும். காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 வரை தேர்வு நடத்தப்படும்.


மேலும் படிக்க | குரூப் 4 தேர்வு; TNPSC வெளியிட்ட முக்கிய அப்டேட்


முதல் நிலை தேர்வில் வெற்றி பெறுபவர்கள் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அந்த தேர்வு இரு தாள்களாக நடைபெறும். அதில் முதல் தாளில் தமிழ் மொழி கட்டாயம் இடம்பெற்றிருக்கும். அதில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே இரண்டாவது தாள் மதிப்பீடு செய்யப்படும்.  


விண்ணப்பிப்பது எப்படி?


http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.03.2022


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR