டி.என்.பி.எஸ்.சி (TNPSC) வெளியிட்ட ஆண்டறிக்கையின்படி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் மாணவர்கள் கடுமையான பயிற்சி எடுத்து வருகின்றனர். அதேநேரத்தில், வினாத்தாள் தொடர்பாக தேர்வர்களுக்கு குழப்பம் இருந்து வருகிறது. ஏனென்றால், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் ஆங்கில மொழித்தாள் நீக்கப்பட்டு, தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ALSO READ | TNPSC: குரூப் 2 தேர்வுகளுக்கு நேர்முகத் தேர்வு ரத்து? அரசு பரிசீலனை
இதனால், பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெறுமா? அல்லது புதியதாக பாடத்திட்டம் வெளியிடப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள டி.என்.பி.எஸ்.சி, தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இதுகுறித்து கவலைப்பட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. தேர்வர்களிடையே எழுந்துள்ள சந்தேகங்களைப் போக்கும் வகையில் விரைவில் குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் புதியதாக வெளியிடப்படும் எனக் தெரிவித்திருந்தது. மேலும், அந்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டால் போதும் என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பொது ஆங்கிலம் நீக்கப்பட்டு, தமிழ் மற்றும் பொது அறிவு என இரண்டு பிரிவுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. பகுதி 1-ல் தமிழ் மொழித்தாள் இடம்பெற்றுள்ளது. பகுதி 2ல் பொது அறிவு இடம்பெற்றுள்ளது. தமிழ் பாடப்பகுதியில் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தொண்டுகளும் என 3 பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. பொது அறிவுப் பிரிவில், அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், இந்திய வரலாறு, இந்திய ஆட்சி, இந்திய பொருளாதாரம் உள்ளிட்ட பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ALSO READ | குரூப் 4 தேர்வு; TNPSC வெளியிட்ட முக்கிய அப்டேட்
டி.என்.பி.எஸ்.சி புதிய பாடத்திட்டத்துக்கான லிங்க்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR