ஜூலை 24-ம் தேதி குரூப் 4 தேர்வு: அக்டோபர் மாதம் முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு!
கிராம நிர்வாக அலுவலர், டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், நில அளவையாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசு பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடைபெறும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்பதே தமிழக இளைஞர்கள் பெரும்பாலானவர்களின் கனவாகும்.
இந்த நிலையில், குரூப் 4 தேர்வு தேதி மற்றும் காலி பணியிடங்களின் எண்ணிக்கை தொடர்பான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் இன்று வெளியிட்டார். மொத்தம் 7,301 காலி பணியிடங்களை நிரப்பப்பட உள்ள நிலையில் குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
7,382 பணியிடங்களில் 81 பணியிடங்கள் விளையாட்டு பிரிவினர் மூலம் நிரப்பப்படும். 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. ஜூலை 24-ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும். இந்த தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் கேட்கப்படும். 100 கேள்விகள் தமிழ்மொழி தொடர்பானதாகவும், 75 கேள்விகள் பொது அறிவு தொடர்பானதாகவும் இருக்கும்.
மேலும் படிக்க | TNPSC தேர்வில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
90 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். 7,382 பணியிடங்களுக்கு நடைபெறும் இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.
குரூப் 4 தேர்வர்கள் நாளை முதல் ஏப்ரல் 28-ம் தேதி விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுகள் மூலம் கிராம நிர்வாக அலுவலர், டைபிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இனி இந்த துறைகளுக்கும் TNPSC தேர்வு - நிதியமைச்சர் அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR