வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை தற்போது மாவட்ட மருத்துவமனையாக மேம்படுத்தப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு புற நோயாளிகளாக தினமும்  நூற்றுக்கணக்கானோர்  வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே மருத்துவமனை அவசர சிகிச்சை புறநோயாளிகள் பிரிவில் ரசீது வாங்கிய பின்னரே சிகிச்சைப் பெற முடியும். அந்த ரசீதை வழங்கும் மருத்துவமனை ஊழியர் ஒருவர் நோயாளிகளிடம் பணம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பைப்புல தண்ணி வருமா? இங்க பணமே வரும்!! அதிகாரிகளை அசர வைத்த தகிடுதத்தம்


அதாவது, இரவு நேரங்களில் சிகிச்சை  பெறுவதற்காக வரும் நோயாளிகளிடம் 50 அல்லது 20 ரூபாய் தந்தால்தான் அனுமதி  சீட்டுத் தருவேன் என்று சொல்லி பணம் பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. பணம் தராத நோயாளிகளிடம் தரக்குறைவாக பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எதற்குப் பணம் ? என்று கேட்கும் நோயாளிகளிடம், ‘ரசீது எழுதும் பேப்பர் மருத்துவமனையில் தருவது இல்லை. நான்தான் பணம் கொடுத்து வாங்குகிறேன். அதற்குத்தான் காசு கேட்கிறேன். முடிஞ்சா கொடு ; இல்லைனா நீயே போய் பேப்பர் வாங்கினு வந்து கொடு’ என்று அந்த மருத்துவமனை ஊழியர் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.  


நோயாளிகளின் தொடர் புகாரை அடுத்து குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் தனஞ்செழியன், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அனைத்துத் துறை ரீதியாவும் மருத்துவமனையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. 


மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டுக்கு ரூ.500 லஞ்சம்! நடவடிக்கை எடுத்த அமைச்சர்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR