தமிழ் நாடு முழுவதும் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு!
மிக்ஜாம் புயலால் தமிழகத்தில் உள்ள பல பள்ளிகள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் மேல்நிலை வகுப்புகளூக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு:
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னைக்கு மட்டும் நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, நாளையும் நாளை மறுநாளும் (டிச., 7 மற்றும் 8) நடைபெற இருந்த மேல்நிலை அரையாண்டு தேர்வுகள் தமிழகம் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் படிக்க | சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை... மற்ற மாவட்டங்களுக்கு?
வெள்ளத்தில் மிதக்கும் சென்னை..
கடந்த திங்கட்கிழமை அன்று (டிச.,4) மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில முக்கிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக, சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம், மைலாப்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இரு தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் பல இடங்களில் இன்றளவும் வெள்ளம் வடியாமல் இருக்கிறது. 48 மணி நேரத்திற்கு மேலாகியும் இன்னும் பல இடங்களில் மின் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது. மோட்டார் வாகனங்களை வைத்து தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் பணிகள் இரவு பகலாக நடைப்பெற்று வருகிறது. மிக்ஜாம் புயல் சென்னையை கடந்து சென்றபோதும், அதன் தாக்கம் இன்னும் குறையாததால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முன்னர் அறிவிப்பு வெளியானது. மேலும், பிற மாவட்டங்களில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்றும் வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களில் நிலைமை சிரானவுடன் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள செய்தி குறிப்பில், “ தொடர் மழையின் காரணமாக, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணையில் 11.12.2023 முதல் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் அதே பாடத்திற்கான தேர்வுகள் நடைபெறும் எனவும், 07.12.23 மற்றும் 08.12.23 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் மட்டும் 14.12.23 மற்றும் 20.12.23 ஆகிய தேதிகளில் முறையே நடைபெறும் எனவும் அறிவிக்கப்படுகிறது. இதன் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி அளவில் வினாத்தாட்கள் தயாரிக்கும் சிரமங்கள் தவிர்க்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சென்னையில் அடுத்து மழை இருக்கா...? முழு வானிலை நிலவரம் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ