Cyclone Michaung Live Updates: தத்தளிக்கும் தலைநகரம்... முழு வீச்சில் மீட்புப்பணி - எப்போது திரும்பும் இயல்பு நிலை!

Cyclone Michaung Live News: மிக்ஜாம் புயல் குறித்த உடனடி தகவல்களையும், மக்களுக்கு தேவையான அறிவிப்புகளையும் இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 5, 2023, 09:41 AM IST
    Cyclone Michaung Live News: மிக்ஜாம் புயல் குறித்து உடனடி தகவல்கள் இதோ!
Live Blog

Cyclone Michaung Live Updates in Tamil, Weather report: சென்னையை நெருங்கி வரும் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தால் பல பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் புகுந்துள்ளது. பல இடங்களிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களும் கடுமையான சிரமத்திற்கு உள்ளாக்கி உள்ளனர். இன்றைப் போன்று நாளையும் நான்கு மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு வரை மழை இருக்கும் என கூறப்படும் நிலையில் மிக்ஜாம் புயல் குறித்த உடனடி தகவல்களையும், மக்களுக்கு தேவையான அறிவிப்புகளையும் இங்கு காணலாம்.

மேலும் படிக்க | மிக்ஜாம் புயல்: சென்னையில் உடைந்த ஏரி..! வெள்ளக்காடாகும் பள்ளிக்கரணை

மேலும் படிக்க | மிக்ஜாம் புயல்: சென்னையில் 47 ஆண்டுகள் பார்க்காத மழை - தீவாக மாறிய அபார்ட்மென்ஸ்

நேரலை தகவல்கள்:

5 December, 2023

  • 22:00 PM

    Cyclone Michaung Live Updates: பாதிக்கப்பட்டவர்களிடம் தொலைப்பேசியில் பேசிய ஸ்டாலின்

    மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைப்பேசியில் உரையாடினார். 

     

  • 20:25 PM

    Cyclone Michaung Live Updates: ரயில்கள் ரத்து

    சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், புறநகர் ரயில்கள் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

  • 20:24 PM

    Cyclone Michaung Live Updates: வடக்கு நோக்கி நகரும் மிக்ஜாம்

    சென்னையில் இருந்து 120 கி.மீ., தூரத்தில் வடக்கு திசை நோக்கி மிக்ஜாம் புயல் நகர்கிறது. ஆந்திராவின் நெல்லூரில் இருந்து 80.கி.மீ., கிழக்கு திசையில் புயல் நிலைக்கொண்டுள்ளது. 

  • 19:57 PM

    Cyclone Michaung Live Updates: இரவு வரை மழை தொடரும்

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்றிரவு வரை மழை பெய்யும் எனவும் பின்னிரவில் மழை நின்ற பின் மின்சார சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 

  • 19:45 PM

    Cyclone Michaung Live Updates: மதம் என பிரிந்ததுபோதும்...

    பூவிருந்தவல்லி பெரிய பள்ளிவாசல் பேஸ்புக்கில் வெளியிட்ட அறிக்கையில், "இன்று அனைத்து சமுதாய மக்களுக்கும் உணவு ஏற்பாடு நடைபெறுகிறது. 150 கிலோ அரிசி கொண்டு உண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிவாசல் தொழுகைக்கு மட்டும் அல்ல அனைத்து சமுதாய மக்களுக்கும் ஆபத்து நேரத்திலும் பயன்படுத்தப்படும்" என குறிப்பிட்டுள்ளது.

     

  • 19:17 PM

    Cyclone Michaung Live Updates: 40,000 கன அடி நீர் வெளியேற்றம்

    பூண்டி ஏரியில் வந்துகொண்டிருக்கும் 40 ஆயிரம் கன அடி நீர் இப்போது அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. 

  • 18:44 PM

    Cyclone Michaung Live Updates: மழை எப்போது நிக்கும்

    இன்று இரவு 12 மணிக்கு மேல் சென்னையில் மழை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மழை நின்று 2 மணிநேரத்திற்குள் மின் விநியோகம் திரும்பி வரும் என தெரிவிக்கப்படுகிறது.

  • 18:42 PM

    Cyclone Michaung Live Updates: 4 பேர் உயிரிழப்பு

    மிக்ஜாம் புயலின் காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயமடைந்தார். இதுவரை 17 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 

  • 18:16 PM

    Cyclone Michaung Live Updates: 25 ஆயிரம் கன அடி திறப்பு

    பூண்டி ஏரியில் இருந்து தற்போது வரும் 25 ஆயிரம் கன அடி நீர் அப்படியே திறந்துவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • 17:39 PM

    Cyclone Michaung Live Updates: 7 அமைச்சர்கள் நியமனம்

    புயல் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் கிடைப்பதை உறுதி செய்யவும், கண்காணிப்புப் பணிகளை விரைவுபடுத்தவும் மேலும் 7 அமைச்சர்களை முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்தார். 

    சு. முத்துசாமி - காஞ்சிபுரம்

    அர. சக்கரபாணி - தாம்பரம்

    எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் - ஆவடி

    எஸ்.எஸ். சிவசங்கர் - கத்திவாக்கம், மணலி, மாத்தூர், சின்னசேக்காடு, எண்ணூர்

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி - வில்லிவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர், கே.கே.நகர், எம்.ஜி.ஆர் நகர்

    எ.வ. வேலு - வேளச்சேரி, மடிப்பாக்கம்

    சி.வெ. கணேசன் - சோழிங்கநல்லூர், பெருங்குடி, பெரும்பாக்கம்

    பி.மூர்த்தி - திருவள்ளூர் மாவட்டம், குறிப்பாக பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள்.

  • 17:37 PM

    Cyclone Michaung Live Updates: படிப்படியாக திரும்பும் மின்சாரம்

    அமைச்சர் டிஆர்பி ராஜா X பதிவு:

  • 16:50 PM

    Cyclone Michaung Live Updates: பூண்டியில் 17,000 கன அடி தண்ணீர் திறப்பு 

    பூண்டி ஏரியில் தற்போது 17,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், அதனை அப்படியே வெளியேற்றி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2.30 மணியளவில் 1000 கன அடியாக வெளியேற்றப்பட்ட நிலையில், 

  • 16:38 PM

    Cyclone Michaung Live Updates: முதல்வரிடம் பேசிய அமித் ஷா

    மிக்ஜாம் புயல் மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார். 

  • 15:25 PM

    Cyclone Michaung Live Updates: இரவு 7 மணிவரை மழை

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றிரவு 7 மணி வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

  • 15:12 PM

    Cyclone Michaung Live Updates: ரஜினி வீட்டு அருகே சாலையில் பெரிய பள்ளம்!

    சென்னை போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உருவான பெரிய பள்ளத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த பள்ளத்திற்குள் 2 கார், 1 ஆட்டோ, 1 கிரேன் விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

  • 15:09 PM

    Cyclone Michaung Live Updates: உயிரை காத்த போலீசார்!

    சக்திகுரு ராதாகிருஷ்ணன் என்ற X தளத்தின் பயனர் ஒருவர், சென்னை பெரம்பூர், ஜாமாலியா பகுதியில் காரின் உள்ளே சிலர் சிக்கிக்கொண்டதாக  பதிவிட்டிருந்தார். அதாவது, கார் உள்ளேயும் மழை நீர் புகுந்ததை  தொடர்ந்து, காரின் கதவை திறக்க முடியாமல் திணறியுள்ளனர். அந்த நபர்களுக்கு உதவி வேண்டி அவர் பதிவிட்ட அந்த பதிவில் தொடர்பு எண்ணையும் கொடுத்து அவர்களை உதவும்படி கூறியிருந்தார். அந்த பதிவில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் காவல்துறை அதிகாரிகளையும் அவர் டேக் செய்திருந்தார். மேலும், அவரின் இருப்பிடம் குறித்து தகவல்களையும் பகிர்ந்தார். 

    காலை 11.13 மணிக்கு அவர் இதனை பதிவிட்டிருந்த நிலையில், காலை 11.46இல் அவர் பத்திரமாக மீட்கப்பட்டதாக பதிவிட்டிருந்தார். சரியான நேரத்தில் உதவியதற்கு நன்றி. நாங்கள் ஜமாலியாவில் இருந்து SPR CITY நுழைவாயிலுக்கு வந்துவிட்டோம். நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம், பேட்டரியுடன் காரை ஸ்டார்ட் செய்ய சில மெக்கானிக்கைத் தேடி வருகிறோம்" என பதிவிட்டிருந்தார். தமிழ்நாடு காவல்துறை அதன் X பக்கத்தில்,"அவர் பத்திரமான இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டார்" என தெரிவித்தது. அதற்கும், பாதிக்கப்பட்ட அந்த நபர் நன்றி தெரிவித்திருந்தார். வெறும் அரைமணி நேரத்தில் அவர்களை போலீசார் காப்பாற்றியது சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. 

  • 14:43 PM

    Cyclone Michaung Live Updates: மின்சாரம் எப்போது வரும்?

    சென்னையில் பல பகுதிகளில் மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகவும், காற்று வேகமாக வீசுவதை தொடர்ந்து மின் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றிரவு சென்னையில் மழை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரம் இன்றிரவுக்குள் வந்துவிடும் என தெரிகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

  • 14:22 PM

    Cyclone Michaung Live Updates: பூண்டி நீர் திறப்பு

    பூண்டி ஏரியில் இருந்து 1000 கன அடி உபரி நீர் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாகத்தில் 6000 கன அடியையும் தாண்டி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 

  • 14:16 PM

    Cyclone Michaung Live Updates: மொபைல் சேவை பாதிப்பு 

    சென்னையின் பல பகுதிகள் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களின் காலிங் மற்றும் இணைய சேவை ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • 14:12 PM

    Cyclone Michaung Live Updates: குருவாயூர் ரயில் நிறுத்தம்

    நேற்று புறப்பட்ட குருவாயூர் ரயில் தற்போது விழுப்புரத்தோடு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை வரை வரும் நிலையில், புயல் காரணமாக தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.   

  • 13:40 PM

    Cyclone Michaung Live: 4 மாவட்டங்களில் இவை இயங்காது

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளையும் (டிச. 5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள், கல்லூரிகள், பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவைக்கு இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • 13:34 PM

    Cyclone Michaung Live: நாளையும் விடுமுறை

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • 13:31 PM

    Cyclone Michaung Live: கொரட்டூரில் வெள்ளம்

    அம்பத்தூர் ஏரி நிரம்பியதை அடுத்து கொரட்டூரில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

  • 13:12 PM

    Cyclone Michaung Live: செம்பரம்பாக்கத்தில் நீர் திறப்பு அதிகரிப்பு

    செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 6000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்தடுத்த அரை மணிநேரத்திற்கு ஒருமுறை 500 கன அடி நீரை திறக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது 12,000 அடி நீர் ஏரிக்கு வந்துகொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

  • 12:59 PM

    Cyclone Michaung Live: திருவள்ளூருக்கு மட்டும் ரெட் அலெர்ட்

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

  • 12:56 PM

    Cyclone Michaung Live: களத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழு

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 9 குழுக்களை தேசிய பேரிடர் மீட்புக் குழு அனுப்பி உள்ளது.  

  • 12:13 PM

    Cyclone Michaung Live: மழை வெள்ளத்தில் சென்னை

    சென்னையில் நுங்கம்பாக்கம், தியாகராய நகர், வேளச்சேரி, மேடவாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தற்போது மழைநீர் வெள்ளக் காடாக சூழந்துள்ளது. தொடர் மழை பெய்து வரும் நிலையில், இரவு வரை தொடரும் எனவும் கூறப்படுகிறது.

  • 12:09 PM

    Cyclone Michaung Live: தீவிர புயலாக வலுவடைந்தது 'மிக்ஜாம்'

    மிக்ஜாம் புயல் தற்போது தீவிர புயலாக வலுவடைந்தது. மேலும் நாளை காலை ஆந்திர மாநிலம் பாபடேலை என்ற பகுதிக்கு அருகே தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • 12:04 PM

    Cyclone Michaung Live News: சென்னைக்கு மிக அருகில்

    சென்னையில் இருந்த 90 கி.மீ., தொலைவில் மிக்ஜாம் புயல் நிலைக் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

  • 12:02 PM

    Cyclone Michaung Live: 3 லட்சம் பேருக்கு உணவு

    சென்னையில் 3 லட்சம் பேருக்கு உணவு ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். 

  • 11:54 AM

    Cyclone Michaung Live: எப்போது மழை நிற்கும்?

    புயல் கரையை கடக்கும்போது எந்த தாக்கமும் சென்னைக்கு இருக்காது. புயல் நெல்லூரை கடக்கும் வரை இங்கு மழை இருக்கும். எனவே, இன்றிரவு வரை கனமழை இருக்கும்.

  • 11:47 AM

    Cyclone Michaung Live: 2015க்கு பின்...

    2015ஆம் ஆண்டு பெருமழைக்கு பின் தற்போது மிக்ஜாம் புயல் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்தார். சென்னை இன்று அதிகாலை 34 செ.மீ., கனமழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது

  • 11:32 AM

    Cyclone Michaung Live: புழல் ஏரி நிலவரம்

    இன்று (4.12.23) மதியம் 12.30 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் 3000 கனஅடியில் இருந்து 6000 கனஅடியாக அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. வரத்து 10000 கனஅடியாக இருப்பதால், நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 24 அடியில் இருந்து தற்போது 21.77 அடியாக உள்ளது.

  • 11:10 AM

    Cyclone Michaung Live: புழல் ஏரியில் 3000 கன அடி உபரி நீர் திறப்பு

    சென்னை புழல் ஏரியில் 3000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக நேற்று (டிச. 3) இரவு முழுவதும் செய்து தொடர் மழையால் புழல் ஏரியில் நீர்வரத்து ஒரே நாளில் 5777 கன அடியாக உயர்ந்துள்ளதால் நேற்று வரை 2000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. எனவே, தற்போது 3000 கன அடியாக உயர்த்தப்பட்டது. மேலும் தற்போது 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் 2910 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 

  • 10:57 AM

    Cyclone Michaung Live: அடித்துச் செல்லப்படும் கார்கள்

    சென்னை மேடவாக்கம் வடக்குபட்டு பகுதியில் அதிக கனமழை பெய்து வருவதால் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்பகுதியில் வசிக்கக் கூடியவர்கள் சாலை ஓரத்தில் கார்களை நிறுத்தி வைத்திருந்த நிலையில் அதிகளவு மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் கார்களையும் அடித்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

    மேடவாக்கம் வடக்குப்பட்டு சாலையில் மழைநீர் ஓடுவது ஏதோ அருவியில் ஆர்ப்பரித்து மழைநீர் ஓடுவது போல் அதிவேகமாக ஓடுகிறது. அதிகனமழை பெய்து வரும் மேடவாக்கம் வடக்குப்பட்டு பகுதியில் மழைநீர் சாலை முழுவதும் ஓடி, கார்களை அடித்துச்செல்வதால் சாலை முடக்கியுள்ளது. 

    தொடர்ந்து அந்த பகுதியில் வசிக்க கூடியவர்கள் வீட்டை விட்டு அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வெளியே வரமுடியாத அளவிற்கு ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்து வருவதால் நீர் பெருக்கெடுத்து ஓடியும் வடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  மேடவாக்கம் ஊராட்சி நிர்வாகம் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர் சாலையில் செல்லாமல் கால்வாயில் செல்வதற்கு வழிவகை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

  • 10:51 AM

    Cyclone Michaung Live: விமான நிலையம் மூடல்

    மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டது. மோசமான வானிலை ஒருபுறம் இருக்க, விமான ஓடுபாதையிலும் மழைநீர் புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    Michaung Cyclone

     

     

  • 10:44 AM

    Cyclone Michaung Live: சென்னை நுங்கம்பாக்கம் மழை

    டிசம்பர் 3: காலை 8.30 - 60 மி.மீ

    டிசம்பர் 4: காலை 8.30 - 230 மி.மீ

    டிசம்பர் 4: காலை 8.30 முதல் 10 மணிவரை - 230 மி.மீ

    இதுவரை மொத்தம் 340 மி.மீ. மழை பெய்துள்ளது.

  • 10:39 AM

    Cyclone Michaung Live: இரவு வரை மழை

    சென்னை வெதர்மேன் பிரதீப் ஜான் அவரது X பக்கத்தில்,"புயலின் இந்த கோரத்தை விளக்க வார்த்தைகள் இல்லை. புயல் வெளிப்புறம் சென்னை கடற்கரை பகுதிகளை சூழந்துள்ளது.

    மேற்கு மேகங்கள் பிடிவாதமாக நிற்கின்றன, அவை சென்னை மீது கவிந்துள்ளன. புயலின் மெதுவான இயக்கத்தால் இன்று மாலை / இரவு வரை சென்னையில் பெரிய அளவில் மழை பெய்யும்" என குறிப்பிட்டுள்ளார். 

Trending News