சென்னையில் அடுத்து மழை இருக்கா...? முழு வானிலை நிலவரம் இதோ!

Chennai Weather: சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் மொத்த பகுதிகளுக்குமான முழுமையான வானிலை நிலவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 6, 2023, 02:40 PM IST
  • மிக்ஜாம் தீவிர புயல் நேற்று கரையை கடந்தது.
  • விருதுநகரில் அதிகபட்சமாக 7 செ.மீ., மழை பதிவானது.
  • இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு.
சென்னையில் அடுத்து மழை இருக்கா...? முழு வானிலை நிலவரம் இதோ! title=

Chennai Weather: மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளில் நிலவிய 'மிக்ஜாம்' தீவிர புயல், தெற்கு ஆந்திரா கடற்கரையை தெற்கு பாபட்லாவிற்கு அருகே நேற்று (டிச. 5) நண்பகல் 12.30 -14.30  மணி அளவில் கடந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து

தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை இன்று (டிச. 6) பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  நாளை (டிச. 7) மற்றும் நாளை மறுதினம் (டிச. 8) பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரும் டிச. 9ஆம் தேதி பெய்யக்கூடும். மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் டிச. 9ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை... மற்ற மாவட்டங்களுக்கு?

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை டிச. 10ஆம் தேதி பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை டிச. 11, 12 ஆகிய தேதிகளில் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் என்ன நிலவரம்? 

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒருசில  பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 

விருதுநகர் AWS (விருதுநகர்), பொன்னமராவதி (புதுக்கோட்டை), நத்தம் (திண்டுக்கல்), சிங்கம்புணரி (சிவகங்கை), சாத்தியார் (மதுரை), அரிமளம் (புதுக்கோட்டை) தலா 7, வாடிப்பட்டி (மதுரை) 5, குடிமியான்மலை (புதுக்கோட்டை), புலிப்பட்டி (மதுரை), திருமயம் (புதுக்கோட்டை), ஆண்டிபட்டி (மதுரை) தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

மேலும் படிக்க | யாரும் வரல... போனும் எடுக்கல... டாஸ்மாக் மட்டும் இருக்கு - சென்னையில் மக்கள் போராட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News