Happy Birthday Rajinikanth: இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார், தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinjikanth) அவர்களுக்கு டிசம்பர் 12 ஆம் தேதி பிறந்தநாள் மற்றும் அவருக்கு 70 வயதாகும்போது ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அவரது ரசிகர்கள் ரஜினியின் பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். இன்றில் இருந்தே சமூக வலைத்தளங்களில் ரஜினி பிறந்தநாள் (Rajinjikanth Birthday)தொடர்பான போஸ்டர்களை பகிர்ந்து வருகின்றனர். அரசியலில் நுழைவது உறுதி, இந்த மாதம் 31 ஆம் தேதி கட்சிக் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் எனது கட்சி போட்டியிடும் எனவும் நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் கூறியிருந்தார். இதனையை அடுத்து அவரது பிறந்தநாள் வருவதால், ரஜினி மக்கள் மன்றம் (Rajini Makkal Mandram) மற்றும் ரசிகர்கள் வெகு உற்சாகமாகவே உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாளை நடிகர் ரஜினிக்கு பிறந்த நாள் என்பதால், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் (AR Rahman) தனது ட்விட்டர் பக்கத்தில், 70வது பிறந்தநாள் காட்சி படத்தை (CDP) ரசிகர்கள் சார்பாக வெளியிட்டுள்ளார். அதில் உங்களுக்கு பிறந்த நாள் மற்றும் நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனவும் வாழ்த்தி உள்ளார்.  


 



தனது கட்சி குறித்த ரஜினியின் (Rajinikanth in Political) அறிவிப்புக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அவரது பிறந்தநாளை நாடு (Happy Birthday Rajinikanth) முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது.


ALSO READ |  திருவண்ணாமலையிலிருந்து போட்டியிடவுள்ளாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?


ஒரு நடிகர் அரசியல்வாதியாக மாறுவது இது முதல் முறை அல்ல. ரஜினிகாந்திற்கு முன்பே, பல நடிகர்கள் அரசியல் இன்னிங்ஸில் விளையாடியுள்ளனர். இருப்பினும், தங்கள் அரசியல் கட்சியில் உயர் பதவியை அடைந்த நடிகர்கள் மிகக்குறைவு. தமிழக அரசியலில் நான்கு முக்கிய பெயர்கள் உள்ளன. அவர்கள் திரைப்பட உலகத்திலிருந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினார்கள் என்றாலும் அரசியல் இன்னிங்ஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றனர். இது மட்டுமல்லாமல், அரசியல் பயணத்தில் அவர்களுக்கு முதல்வர் நாற்காலியும் (Chief Ministers of Tamil Nadu) கிடைத்தது. இதில் எம் கருணாநிதி (Karunanidhi), எம்.ஜி.ராமச்சந்திரன் (MG Ramachandran), ஜானகி ராமச்சந்திரன் (Janaki Ramachandran), ஜெயலலிதா (Jayalalithaa) ஆகியோரின் பெயர்கள் அடங்கும். 


இவர்களை போலவே நடிகர் ரஜினியும் தனது அரசியல் வாழ்க்கையில் வெற்றி பெற்று, தமிழகத்தை ஆளுவாரா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும். நாமும் அவரை வாழ்த்துவோம்.


ALSO READ |  ரஜினியின் கனவு வெற்றி பெறுமா? அரசியலில் நுழைந்து தமிழக முதல்வரான 4 திரைப்பட நட்சத்திரங்கள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR