கனமழை எச்சரிக்கை! அனைத்து பள்ளிகள் - கல்லூரிகளுக்கு ஒருநாள் விடுமுறை
Heavy Rain Warning: கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Heavy Rain Warning: நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சா.ப. அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த உத்தரவை மீறி இயங்கும் பள்ளி அல்லது கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு நாளை ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ள நிலையில், தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் உதகையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் அவசர ஆலோசனை:
தமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்றும் மழை பெய்தது. ஆனால் குறைவாக மழை பதிவானது. அதேநேரத்தில் நாளை மிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலார்ட் விடுக்கபட்டுள்ளது. அதனையடுத்து உதகையில் வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கன மழை பெய்தால் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் படிக்க: கேரளாவில் கொட்டித் தீர்த்த கனமழை : 12 பேர் பலி
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கா.ராமசந்திரன்:, "கனமழை பெய்து பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட 2 தேசிய பேரிடர் மீட்பு படைகள் மற்றும் ஒரு மாநில பேரிடர் மீட்பு படை வரவழைக்கபட்டு உள்ளதகவும், 283 இடங்கள் பாதிக்கபடும் இடங்களாக கண்டறியபட்டு உள்ளதாகவும் 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் வனத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
அதேபோல 353 அபாயகரமான மரங்கள் வெட்டபட்டுள்ளதாகவும் 308 மரங்கள் வெட்டபடும் என்ற அவர் தமிழகத்தில் உள்ள 13 சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் விதமாக சர்வதேச ராம்சர் திட்டத்தில் சேர்க்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாகவும் அதில் கோடியகரை ஏற்கனவே சர்வதேச ராம்சர் திட்டத்தில் சேர்க்கபட்ட நிலையில், தற்போது பள்ளிகரனை, பிச்சாவரம், கரிகிலி ஆகிய 3 இடங்கள் இடங்களும் சேர்க்கபட்டு உள்ளதாவும் ஆகஸ் 15-ந்தேதிக்குள் மேலும் 5 இடங்கள் ராம்சர் திட்டத்தில் சேர்க்கபடும் என எதிர் பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவின் தெற்கு தீபகற்பத்தில் இந்த வாரம் மிக கனமழை நீடிக்கும்:
தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'அடுத்த மூன்று நாட்களுக்கு கேரளா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை தொடரும். கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகள் உட்பட இந்தியாவின் தெற்கு தீபகற்பத்தில் இந்த வாரம் மிக கனமழை நீடிக்கும். ஆகஸ்ட் 3 மற்றும் 4 தேதிகளில் பெங்களூரில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது.
மேலும் படிக்க: சேலத்தில் பெய்த கனமழை; 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்
தேசிய தலைநகரில் லேசான மழை பெய்யும்:
நாட்டின் மத்திய மாநிலங்களான மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 5 முதல் மத்திய மற்றும் வட மாநிலங்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய தலைநகரில் புதன்கிழமை லேசான மழை பெய்யும், அதே நேரத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை:
தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை, குமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை:
அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், கிழக்கு உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், சிக்கிம், அந்தமான், நிக்கோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் , திரிபுரா, தெலுங்கானா, ராயலசீமா, வடக்கு கர்நாடகா மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும். இந்த பகுதிகளுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்று வானிலை மையம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Red Alert: மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - அதிகனமழைக்கு வாய்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ