தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கேரளாவில் லேசான மழை பெய்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டு 12 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் கண்ணூரில் நிலச்சரிவில் சிக்கியும், கோட்டயம், எர்ணாகுளம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர்.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், மலப்புரம், வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது மழையின் தீவிரம் சற்று குறைந்துள்ளதால் ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் ஆரஞ்சு எச்சரிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீடிக்கிறது.
மேலும் படிக்க | கேரளாவில் குரங்கு அம்மை - தடுப்பூசியும் சிகிச்சை முறையும்!
திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் காசர்கோடு ஆகிய இடங்களுக்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு எச்சரிக்கை மஞ்சள் எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படும் நிலையில், பக்தர்கள் பம்பை ஆறு மற்றும் நீலி மலை வழியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரியாறு ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், கொச்சியில் உள்ள ஆலுவா மகாதேவா கோயில் நீரில் மூழ்கியுள்ளது.
கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய தகவலின்படி, திருவனந்தபுரத்தில் உள்ள கரமனா மற்றும் நெய்யாறு ஆறுகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அதேபோல, அச்சன்கோவில், காளியார், தொடுபுழா மற்றும் மீனச்சில் ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென தலைமை செயலாளர் வி.பி. ஜாய்க்கு முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
கேரள அரசின் திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெறவிருந்த நிலையில், கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படுமென கேரள சுகாதாரத்துறை அமைச்சர் V.N.வாசன் கூறியுள்ளார்.
இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, திருச்சூர், மலப்புரம், எர்ணாகுளம், கோட்டயம், கொல்லம் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 9 குழுக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை; பீதியை கிளப்பும் Monkeypox
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ