தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளன.
குறிப்பாக சேலம் கிச்சிபாளையம் பகுதியில் உள்ள காந்திநகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை நீரை வெளியேற்றுவதற்கு வழி தெரியாமல் அவதியுற்றுள்ளனர். குறிப்பாக வீடுகளுக்குள் விஷ பூச்சிகள் வருவதால் உயிருக்கு பயந்து குழந்தையுடன் வசித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பல்வேறு வீடுகளில் மழை நீர் முழங்கால் அளவிற்கு மேல் உள்ளதால் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்று வசிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் எப்பொழுது மழை பெய்தாலும் இந்தப் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுவது வாடிக்கையாக உள்ளது. மழைநீர் தேங்காமல் வெளியேறுவதற்கு கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க | Red Alert: மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - அதிகனமழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில், சேலம் கிச்சிப்பாளையம் பகுதி வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிச்சிபாளையம் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
முன்னதாக, வானிலை அராய்ச்சி மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இந்தியாவுக்கான பயணத்தடையை நீக்கியது சவூதி அரேபியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ