சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்குப் பருவ மழை காரணமாக பல மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.  இந்த நிலையில், அடுத்த ஐந்து நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் (Tamil Nadu) கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், மக்கள் பெரும்பாலான இடங்களில் இதமான வானிலையை அனுபவித்து வருகின்றனர். தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழையும் பெய்து வருகிறது. இது வெயிலை மேலும் குறைத்துள்ளது. 


இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள், நீலகிரி, கோவை, மதுரை, தேனி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெயக்கூடும் என்றும் தெரிவிகப்பட்டுள்ளது. 


ALSO READ: முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக்கு 5 பேர் கொண்ட குழு அமைப்பு


மேலும், நாளை மறுநாள், சென்னை (Chennai) திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் திருப்பூர், திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யகூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதற்கடுத்த நாளான ஜூலை 23 ஆம் தேதியும் இந்த மாவட்டங்களில் பல இடங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 


சென்னையைப் பொறுத்தவரையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 


தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பரவலான மழை (TN Rain) பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சமீபத்தில் பல மாவட்டங்களில் பெய்து வரும் மழையால், நிலத்தடி நீர்மட்டமும் நல்ல முறையில் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். 


தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் அடுத்த ஐந்து நாட்களுக்கு மீன் பிடிக்க அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரித்துள்ளது. 


ALSO READ: Tamil Nadu Shocker: விருதுநகர் பட்டாசு பிரிவில் பயங்கர தீ விபத்து, இருவர் பலி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR