தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகர மேயராக பொறுப்பு வகித்தார். அப்போது சென்னை மாநகரை அழகுபடுத்தும் நோக்கத்தில் சிங்கார சென்னை திட்டம் கொண்டு வரப்பட்டது. ஜவகர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ‘சிங்கார சென்னை’ திட்டத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையில் திமுக (DMK) ஆட்சியில் இருந்த இந்த பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. இதன் பின்னர் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற அதிமுக ஆட்சியில் சிங்கார சென்னை திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கனவு திட்டமான சிங்கார சென்னை திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதன்படி அந்த திட்டம் ‘சிங்கார சென்னை 2.0’ வாக புதுப்பொலிவு பெற உள்ளது என்று அவர் கூறியிருந்தார்.
ALSO READ | Bus Pass Validity: 1000 ரூபாய் பாஸ் ஜூலை 15 வரை செல்லும்
இந்நிலையில் இன்று தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் (TN Assembly Session) முதல் கூட்டம் நடைபெற்றது வருகிறது. அதில், சிங்காரச் சென்னை 2.0 திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டப்பேரவை உரையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு நடைபெறும் 16-வது பேரவையின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது.,
1. மக்கள் தொகைக்கு ஏற்ப சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்படும்.
2, மதுரவாயல் மற்றும் சென்னை துறைமுகம் உயர்மட்ட சாலைத் திட்டம் விரைவுபடுத்தப்படும்.
3. சென்னையில் வெள்ள நீர் மேலாண்மைக்கு தனிக்குழு அமைக்கப்படும்.
4. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.
5. மதுரை, சேலம், திருநெல்வேலி, திருச்சியில் விரைவு போக்குவரத்து அமைபுக்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்படும்.
6. பெரிய நகரங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப துணை நகரங்கள் உருவாக்கப்படும்.
7. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது என்று தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது.
8. காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
9. இந்த நிதி ஆண்டில் 125 மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி என்ற இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்படும்
10. சிங்காரச் சென்னை 2.0 திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்
11. கொரோனா மூன்றாம் அலையை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.
12. தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடப்பாண்டு பெரிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும்.
13. அரசு பணியில் ஆதி திராவிடர் பழங்குடியினருக்கான காலியிடங்கள் சிறப்பு நியமனம் மூலம் நிரப்பப்படும்.
14. புதிய தொழில் நிறுவனங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
15. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
16. புதிய ரேசன் அட்டை விண்ணப்பித்தால் 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
17. தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
18. மதுரையில் ரூ70 கோடியில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும்.
19. கச்சத் தீவு மீட்பு, மீனவர் நலனுக்கான ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
20. இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களும் திருத்தங்களையும் மேற்கொள்ள மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.
21. உழவர் சந்தைக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் உழவர் சந்தை அமைக்கப்படும்.
22. வேளாண்துறைக்கு முக்கியத்துவம் அமைக்கும் வகையில் தனி பட்ஜெட் அமைக்கப்படும்.
23. நீட் தேர்வை ரத்து செய்யும் சட்ட முன் வடிவை கொண்டு வந்து ஜனாதிபதி ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
ALSO READ | Lockdown Update: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரசு பஸ் சேவை தொடக்கம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR