TN Rain Alert: தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில், நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் இன்று இடி மின்னலுடன கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, வளிமண்டல சுழற்சி மற்றும் வடக்கு காலோர ஆந்திராவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவற்றின் காரணமாக இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலான மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் (Tamil Nadu), நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் இன்று இடி மின்னலுடன கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழையும், நாளை இடி மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் வடக்கு கடலோர மாட்டங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ALSO READ: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு; ஆன்லைனில் எவ்வாறு பார்ப்பது
நாளை மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மிதமான முதல் கனமழையும் (Heavy Rain), பிற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை (Chennai) பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னையின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று அதிக அளவில் மழை பதிவாகியது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
ஆந்திர கடல் பகுதி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
ALSO READ: முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி பயணம்; குடியரசுத் தலைவரை இன்று சந்திக்கிறார்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR