தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையிலிருந்து நேற்று டெல்லி வந்துள்ள முதல்வர் ஸ்டாலி்ன், பதவி ஏற்றுக் கொண்ட பிறகு மேற்கொள்ளும் இரண்டாவது தில்லி பயணம் இதுவாகும். திமுகவை சேர்ந்த எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் விமான நிலையத்தில் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் (M.K.Stalin) இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று நண்பகல் 12 மணிக்கு சந்திக்கிறார். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசு தலைவருடன் மேற்கொள்ள உள்ள இந்த சந்திப்பின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின் நீட் தேர்வு, எழு பேர் விடுதலை, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, தமிழக சட்டமன்றத்தில் கலைஞர் மு,கருணாநிதியின் படத்தை திறக்கவும் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ | முதல்வர் மு.க.ஸ்டாலின் தில்லி பயணம், இன்று பிரதமரை சந்திக்கிறார்
இந்நிலையில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவு நாளான ஆக்ஸ்ட் 7ம் தேதியின் போது திட்டமிடப்பட்டுள்ள அவரது படத்திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை அழைக்கவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், படத்திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உட்பட பல கட்சி தலைவர்களை அழைக்கவும் திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, மு.க.ஸ்டாலின் முதன் முறையாக, பிரதமரை சந்திக்க கடந்த மாதம் 17ம் தேதி தலைநகர் தில்லிக்கு பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் போது பல முக்கிய விஷயங்களைப் பற்றி பிரதமருடன் கலந்தாலோசனை செய்தார்.
இன்றைய குடியரசுத் தலைவர் உடனான சந்திப்பிற்கு பிறகு, மு.க.ஸ்டாலின் இன்று மாலையே சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.
ALSO READ | முதலமைச்சரான பின் முதன்முறையாக நாளை திருவாரூர் செல்கிறார் மு.க.ஸ்டாலின்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR