தமிழ்நாடு வானிலை நிலவரம்: நவம்பர் 14 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதேநேரத்தில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கடலோர பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்தியா வானிலை ஆய்வுத் துறை (IMD) அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்த 48 மணிநேரங்களுக்கு சென்னை (Chennai) நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 31 டிகிரி செல்சியஸ் மற்றும் 25 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் எனவும் இந்தியா வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department) தெரிவித்துள்ளது.


 



தென் இந்தியாவில் (South india) பரவலான மழைப்பொழிவு நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) தெரிவித்துள்ளது. தமிழ் நாட்டிற்கான மழை நிலவரம் குறித்து தெரிவித்த ஐஎம்டி, ஆந்திரா கரையோர மற்றும் கேரளாவின் சில பகுதிகளை வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) வரை மழை பரவலாக இருக்கும் எனவும், அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் (Andaman & Nicobar Islands) இந்த காலகட்டத்தில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.


ALSO READ |  La Nina தாக்கம் காரணமாக இந்தியாவில் இந்த வருடம் குளிர் கடுமையாக இருக்கும் : IMD


அடுத்த 4-5 நாட்களில் தமிழகம், புதுச்சேரி கடலோர ஆந்திரா, கேரளா மற்றும் லட்சத்தீப் பகுதிகளில் (Lakshadweep Area) இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழை பெய்யக்கூடும் என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் பலத்த மழை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் கடலோர ஆந்திராவில் பரவலாக மழை பெய்யும்.


 



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR