La Nina தாக்கம் காரணமாக இந்தியாவில் இந்த வருடம் குளிர் கடுமையாக இருக்கும் : IMD

லா நினா தாக்கம் காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் கடுமையான குளிர்காலம் நிலவும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 2, 2020, 12:56 PM IST
  • லா நினா தாக்கம் காரணமாக இந்த ஆண்டு இந்தியாவில் கடுமையான குளிர்காலம் நிலவும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
  • புனே மற்றும் நாசிக் போன்ற மத்திய மகாராஷ்டிராவின் வடக்கு பகுதிகளில், லா நினா தாக்கம் காரணமாக வெப்பநிலையை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
La Nina தாக்கம் காரணமாக இந்தியாவில் இந்த வருடம் குளிர் கடுமையாக இருக்கும் : IMD title=

புதுடெல்லி: அக்டோபரில் டெல்லியில் இரவு வெப்பநிலை 58 ஆண்டுகளில் குறைந்த அளவாக பதிவாகியுள்ளது. தேசிய தலைநகரில், வழக்கமாக குளிர்காலம் தொடங்கும் காலத்திற்கு முன்பே அதிக குளிரை உணர்கிறார்கள்.

டெல்லியின் சப்தர்ஜங் ஆய்வகத்தில் அக்டோபரில் சராசரியாக 17.2 டிகிரி பதிவாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில், ஸ்ரீநகரில் அக்டோபர் 27 அன்று மிக குறைந்த அளவாக கிட்டதட்ட பூஜ்யம் என பதிவாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் இருந்து வீசும் குளிர்ந்த காற்றினால் வட மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் வெப்பநிலையை இயல்பை விட குறைவாக உள்ளது.

புனே மற்றும் நாசிக் போன்ற மத்திய மகாராஷ்டிராவின் வடக்கு பகுதிகளில், லா நினா தாக்கம் காரணமாக வெப்பநிலையை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும். சனிக்கிழமையன்று, லூதியானா புனேவைப் போலவே குறைந்த அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. டெஹ்ராடூனில்,  14.3 டிகிரி செல்சியஸ் தட்பநிலை பதிவாகியது.

லா நினா தாக்கம் காரணமாக இந்த ஆண்டு குளிர்காலம் கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கடந்த மாதம் கணித்துள்ளது. "லா நினா பலவீனமடைந்துள்ளதால், இந்த ஆண்டு அதிக குளிரை எதிர்பார்க்கலாம்.எல் நினோ மற்றும் லா நினா தாக்கம் குளிர்கால நிலையில் மாற்றம் ஏற்படும் முக்கிய காரணியாக உள்ளது " என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் கூறியுள்ளார்.

"லா நினா என்பது குளிர்  காற்று அதிகம் வீசுவதற்கு சாதகமாக உள்ளது, எல் நினோ இதற்கு எதிர்மறையாக்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்று அவர் கூறினார்.

லா நினா என்பது பசிபிக் பெருங்ககடலில், அதிகம் குளிர் நிலையை விவரிக்கும் ஒரு காலநிலை தாக்கம் ஆகும். எல் நினோ வழக்கத்திற்கு மாறாக கடல் வெப்பநிலை அதிகரிப்பதை குறிக்கிறது. இரண்டு காரணிகளும் இந்திய பருவமழையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

ALSO READ | இன்றைய வானிலை முனறிவிப்பு: தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News