திருநெல்வேலி: கொட்டும் மழை.. அந்தரத்தில் தண்டவாளம்.. தவிக்கும் மக்கள்..!
Tirunelveli Heavy Rain Updates: திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்துவரும் நிலையில், மண்ணரிப்பு ஏற்பட்டு திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் ரயில்வே தண்டவாளம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.
திருநெல்வேலியில் வரலாறு காணாத மழை
தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தொடர் கன மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்துக் கொண்டிருப்பதால் குளம், குட்டை, ஏரி என அனைத்தும் நிரம்பி மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் மழை வெள்ள நீர் புகுந்துள்ளது. திருநெல்வேலி ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் சுமார் 10 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியிருக்கிறது. குடியிருப்புகள் எல்லாம் முதல் தளம் வரை மூழ்கிவிட்டன. தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகள் தேங்கியிருக்கும் மழை நீரில் முழுவதுமாக மூழ்கி கிடக்கின்றன. ஆங்காங்கே ஏற்பட்டிருக்கும் காட்டாற்று வெள்ளத்தில் சாலைகள் உடைபட்டு போக்குவரத்தும் முடங்கியுள்ளது.
மேலும் படிக்க | தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்... ஒரே நாளில் ஒரு ஆண்டுக்கான மழை - எங்கு அதிகம்?
வெள்ளத்தில் மூழ்கிய பாலம்
திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையை இணைக்கும் சுலோச்சன முதலியார் பாலம் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கியது. இதனால் கொக்கிரகுளம், வண்ணாரப்பேட்டை பகுதிகளில் எல்லாம் மழைநீர் உட்புகுந்துள்ளது. அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுள்ளனர். அரசின் நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மற்றொரு இடத்தில் காட்டாற்று வெளத்தில் ஏற்பட்ட மண்ணரிப்பில் திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் ரயில் தண்டவாளம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. கட்டுக்கடங்காத மழை வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
திருநெல்வேலியில் மீட்பு பணிகள்
கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டத்துக்கு மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம், பூத்துறை கடற்கரை கிராமத்தில் இருந்து ஐந்து படகுகள் நெல்லை மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதே போன்று பல கடற்கரை கிராமங்களில் இருந்தும் மீட்பு நடவடிக்கைகளுக்கு படகுகள் அனுப்பப்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
அமைச்சர் ராமச்சந்திரன் விளக்கம்
கனமழை குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களில் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றிட தனித்தனியாக அமைச்சர்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் அணைகளில் இருந்து தாமிரபரணியில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் பாதை மாற்றம்
கன மழையின் காரணமாக தமிழகம் முழுவதும் ரயில்களின் சேவைகள் மாற்றம் செய்யபட்ட நிலையில், சென்னை - கொல்லம் வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் பாதையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக சென்னையில் இருந்து திண்டுக்கல் வழியாக மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக செல்லும். ஆனால் இப்போது, பழனி வழியாக உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில்களும் பழனி வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாலக்காடு முதல் திருச்செந்தூர் செல்லும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ