கள்ளக்குறிச்சி முழுவதும் கடுமையான பனிப்பொழிவு!
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக அனைத்துப் பகுதிகளும் புகை மண்டலம் போல் காட்சி அளிக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (Kallakurichi District) கடந்த சில வாரங்களாக பகல் நேரங்களில் வெயிலும், இரவு மற்றும் அதிகாலை ஆகிய நேரங்களில் பனிப்பொழிவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு மேலாகியும் கடுமையான பனிப்பொழிவு பெய்து வருகிறது. இந்தப் பனிப்பொழிவு காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரம் மற்றும் கிராம பகுதிகள் புகை மண்டலம் போல் காட்சி அளிக்கிறது.
மேலும் சாலைகளில் செல்லும் கார், பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கு போட்டவாறு குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. காரணம் சாலைகளில் எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு கடுமையான பணி இதுவரை இல்லாத அளவிற்கு இன்று பெய்து வருகிறது. இந்த பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் அதிகாலையிலேயே வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிதுள்ளனர்.
மேலும் தற்போது கொரோனா நோய் (Corona Virus)தொற்று வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் இதுபோன்று பனிப் பொழிவின் போது வெளியே சென்றாள் உடனே சளி, இரும்பல் ஏற்பட்டு நோய்த் தொற்று வேகமாகப் பரவும் என்பதால் பொதுமக்கள் காலையிலேயே வெளியே வருவதற்கு அச்சம் அடைந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | வேலூர்; எருதுவிடும் விழாவில் சோகம் - எருது முட்டிய சிறுமி உயிரிழப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR