கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா நெடுமானுர் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளி குமரேசன்-சிவகலா இவர்களுடைய 7 வயது மகள் ரித்திகா. இவர் நெடுமானுர் அரசு ஆரம்பப் பள்ளியில் படித்து வருகிறார், கொரோன அதிகரித்துள்ள நிலையில் அரசு விடுமுறை ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு அளித்துள்ளது விடுமுறை என்பதால் ரித்திகா இன்று காலை சக நண்பர்களுடன் விளையாடிக் கொண்டு வீட்டுக்கு அருகே இருந்த வயல்வெளி கிணற்றிர்க்கு குளிக்க சென்றுள்ளார்.
ALSO READ | அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகமே நடத்த முடிவு!
அப்போது நீச்சல் தெரியாத ரித்திகா நிலை தடுமாறி கிணற்றின் ஆழ் பகுதிக்கு சென்றுள்ளார் ரித்திகா. நீண்ட நேரம் காணவில்லை என அவருடன் சென்றிருந்த சக மாணவிகள் ஊரில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதனை அறிந்த உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கிணற்றில் தேடியபோது கிணற்றில் முழுமையாக தண்ணீர் நிரம்பி இருந்ததால் நீண்ட நேரம் தேடியும் ரித்திகா கிடைக்கவில்லை. இதனால் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தறப்பட்ட நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக தேடி ஆழ் கிணற்றில் இருந்த ரித்திக்காவை மிகவும் சிரமப்பட்டுத் தேடி உடலை கண்டுபிடித்தனர்.
உயிரிழந்தார் ரித்திக்காவின் உடலை கைப்பற்றிய எலவனாசூர்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவி ரித்திகா உயிர் இழந்த செய்தியால் உறவினர்களும் ஊர் மக்களும் சோகத்தில் மூழ்கினர்.
ALSO READ | Pongal 2022: முகூர்த்த காலுடன் தொடங்கியதா அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR