வேலூர்; எருதுவிடும் விழாவில் சோகம் - எருது முட்டிய சிறுமி உயிரிழப்பு

வேலூர் மாவட்டத்தில் எருது முட்டிதால் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்துள்ளார்

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 01:53 PM IST
  • வேலூரில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் சோகம்
  • மாடு முட்டியதில் படுகாயமடைந்த சிறுமி
  • மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழப்பு
 வேலூர்; எருதுவிடும் விழாவில் சோகம் - எருது முட்டிய சிறுமி உயிரிழப்பு title=

வேலூர் மாவட்டம், லத்தேரியை அடுத்த பனமடங்கி கிராமத்தில் பெங்கல் பண்டிகையையொட்டி கடந்த 15-ம் தேதி எருதுவிடும் விழா நடைபெற்றது. அந்த இடத்துக்கு அருகாமையில் பொய்கை கிராமத்தை சேர்ந்த நரேஷ் என்பவர் கூழ் கடை போட்டிருந்துள்ளார். அவருடன் 13 வயது மகளும் அங்கிருந்தவாறு எருதுவிடும் விழாவை ரசித்துள்ளார். அப்போது, திடீரென வேகமாக வந்த மாடு ஒன்று சிறுமியை முட்டியுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ALSO READ | திமுகவின் செய்தித் தொடர்பாளர்களா IAS, IPS அதிகாரிகள்? எச்சரிக்கும் ஹெச்.ராஜா

அடுக்கம் பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மருத்துவர்களின் தொடர் முயற்சிக்கு இடையே சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். பொங்கல் விழாவையொட்டி மகிழ்ச்சியாக நடத்தப்பட்ட எருது விடும் விழாவில் சிறுமி மாடு முட்டி இறந்த நிகழ்வு அப்பகுதி மக்களை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது

வேலூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை மாடு முட்டி 3 பேர் உயிரிழந்துள்ளனர். பேரண்பட்டு, கீழ் அரசம்பட்டு, பன மடங்கி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற எருது விழாக்களிலும் மாடு முட்டி முதியவர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மதுரையைச் சேர்ந்த ஆங்கில பட்டதாரி மணி என்பவர் முதல் பரிசை தட்டிச் சென்றார். 400 காளைகள் அவிழ்த்துவிடப்பட்ட இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 21 காளைகளை அடக்கிய அவர், முதலமைச்சர் வழங்கிய காரை பரிசாக பெற்றார். 2வது பரிசை மதுரையைச் சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞர் பெற்றார். 

ALSO READ | பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக புகார் - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News